சினிமா செய்திகள்
லாரன்ஸ் அடுத்த படத்தில் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு!
Published
4 years agoon
By
seithichurul
நடிகர் மற்றும் நடன இயக்குநரான ராகவா லாரன்ஸ் மீது, நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்நிலையில், தற்போது, ராகவா லாரன்ஸ் தனக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு அளித்துள்ளதாகவும், அதற்கான அட்வான்ஸை அவர் கொடுத்ததாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மற்றும் தமிழ் பட உலகில் பலர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு படவாய்ப்புகளை தரவில்லை என ஸ்ரீலீக்ஸ் மூலம் நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ச்சியாக வெளிப்படையான புகார்களை தெரிவித்து வந்தார். இந்த லிஸ்டில் ராகவா லாரன்ஸின் பெயரும் இடம்பெற்றது.
மற்ற நடிகர்கள் ஸ்ரீரெட்டியை மதிக்காமல், அவரை எதிர்த்த நிலையில், லாரன்ஸ், உங்களது திறமையை நிரூபித்தால் நிச்சயம் வாய்ப்பு தருவதாக அறிவித்தார். உடனடியாக ஒரு வீடியொவை ஸ்ரீரெட்டி ஷேர் செய்தார்.
தற்போது, நண்பர்களுக்கு ஒரு இனிய செய்தி, நான் லாரன்ஸை சந்தித்தேன். அவரை சுற்றி நிறைய குழந்தைகள் அவரை நம்பி இருந்தனர். அவரது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்தார். மேலும், அதற்கான அட்வான்ஸ் தொகையையும் லாரன்ஸ் வழங்கியதாக ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரெட்டி விரும்பிய டீல் ஓகே ஆனவுடன் பாலியல் குற்றச்சாட்டை மறந்துவிட்டு பணிபுரிகிறாரே, இது குற்றச்சாட்டா அல்லது பிளாக் மெயிலா என நெட்டிசன்கள் கமெண்டுகளில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
You may like
’சந்திரமுகி 2’ படத்தில் இந்த நடிகரா? அதிகாரபூர்வ அறிவிப்பில் ஆச்சரியம்!
சில்க் ஸ்மிதாவின் பயோபிக் படத்தில் சர்ச்சை நடிகை: வீடியோ வைரல்!
என்னுடையதை ஒப்பிடும் போது திரிஷா, சமந்தாவுக்கு ஒன்றுமே இல்லை: ஸ்ரீரெட்டி
சந்தானத்தை கவர இப்படியொரு வீடியோவை வெளியிட்ட ஸ்ரீரெட்டி!
விஜய் நடிக்கும் பிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா!
ரெமோவுக்கு பிறகு கீர்த்திசுரேஷுக்கு மீண்டும் அடித்த ஜாக்பாட்!