கிரிக்கெட்
பாகிஸ்தான் இலங்கைக்கு எதிராக மழை அபார ஆட்டம்: ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 11-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் பிரிஸ்டோல் மைதானத்தில் விளையாடுவதாக இருந்தது. ஆனால் இந்த போட்டி தொடர் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.
மழை விடும் விடும் என காத்திருந்த நடுவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இடைவிடாத மழையால் நடுவர்கள் டாஸ் கூட போடாமல் இந்த போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர். ஒரு பந்துகூட விசப்படாத நிலையில் இந்த போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து வழங்கப்பட்டது.
இதனால் புள்ளிப் பட்டியலில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 3 புள்ளிகளுடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.
இன்றைய போட்டிகள்:
1. அணிகள்: வங்கதேசம் Vs இங்கிலாந்து
இடம்: கார்டிஃப் மைதானம்
நேரம்: மாலை 3 மணி
2. அணிகள்: ஆஃப்கானிஸ்தான் Vs நியூசிலாந்து
இடம்: டவுன் மைதானம்
நேரம்: மாலை 6 மணி




















