Connect with us

சினிமா செய்திகள்

ஸ்பாய்லர்ஸ் அலர்ட்: அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் விமர்சனம்!

Published

on

ஒருவழியாக ஏப்ரல் 26ம் தேதியும் வந்துவிட்டது. உலக மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் எண்ட் என்ன என்பதும் தானோஸை அழிக்கும் முயற்சியில் அவெஞ்சர்ஸ் டீமுக்கு எத்தனை இழப்புகள் ஏற்பட்டது என்றும் தெரிந்துவிட்டது. விமர்சனத்துக்குள் செல்லும் முன், படம் குறித்த பல தகவல்கள் இருப்பதால், நான் படத்தைப் பார்த்துவிட்டுத் தான் விமர்சனம் படிப்பேன் என்பவர்கள், இனியும் விமர்சனத்தை தொடர வேண்டாம்.

கடந்த மாதம் கேப்டன் மார்வெல் வந்தவுடன் காளி ஆத்தா வந்துவிட்டா, ஈஸியா தானோஸை அழித்து உயிரிழந்த பாதி மக்களை மீண்டும் கொண்டு வருவார்கள் என எண்ணினோம். ஆனால், மார்வெல்ஸ் அதற்கு மாறாக உணர்ச்சி பொங்க ஒரு ஆக்‌ஷன் சூப்பர் ஹீரோ படத்தை கொடுத்துள்ளது.

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தில் 6 இன்பினிட்டி கற்களையும் கைப்பற்றும் தானோஸ் ஒரு சொடக்கில் பாதி உலகத்தை அழித்து விடுவான்.

அதில், டாக்டர் ஸ்ட்ரேஞ், ஸ்பைடர்மேன், பிளாக் பாந்தர் உட்பட பாதி சூப்பர் ஹீரோ டீமும் அழிந்துவிடும். மீதமுள்ள சூப்பர் டீம் உலகத்தை காப்பற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியில், தவித்து இருப்பார்கள்.

விண்வெளியில் தானோஸிடம் சண்டையிட்டு தோற்ற அயன்மேன் பூமிக்கு திரும்பமுடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பார்.

கேப்டன் மார்வெல் எண்ட் கிரெடிட்ஸில் பூமிக்கு வரும் கேப்டன் மார்வெல், விண்வெளிக்கு சென்று டோனி ஸ்டார்க்கை காப்பாற்றிக் கொண்டு பூமிக்கு வருவார்.

குவாண்டம் உலகில் இருந்து தப்பித்து வரும் ஆன்ட் மேன், டைம் டிராவல் குறித்த விஷயத்தை அவெஞ்சர்ஸ் டீமிடம் சொல்ல, டைம் டிராவல் செய்து இன்பினிட்டி கற்களை எடுத்து தானோஸின் முயற்சியை முறியடிக்க அவெஞ்சர்ஸ் குழு மோதும் இறுதி யுத்தமே இந்த எண்ட்கேம்.

அதில், வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதை விறுவிறுப்பான ட்விஸ்ட் கலந்த திரைக்கதையுடன் இருப்பதை தியேட்டரில் சென்று கண்டு களியுங்கள்.

உயிரிழந்த பாதி மக்களையும் பாதி சூப்பர் ஹீரோக்களையும் மீட்டு கொண்டு வரும் முயற்சி ஈஸியாக இருந்து விட்டால் படம் படு மொக்கை என அனைவரும் விமர்சித்திருப்பர்.

ஆனால் அயன்மேன், பிளாக் விடோ இன்னும் சில சூப்பர் ஹீரோக்களை நிரந்தரமாக உயிர்த்தியாகம் செய்ய வைத்து உலகத்தை ரட்சித்திருப்பது தான் படத்தின் ஹைலைட்.

11 ஆண்டுகளாக 22 மார்வெல் படங்களின் மொத்ததிற்குமான கிளைமேக்ஸ் படமாக வந்துள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை பார்க்கும் மார்வெல் ரசிகர்கள் கண்ணீர் விடாமல் வெளியே வர முடியாது.

பல்ப்ஸ்:

முதல் பாதி சற்று சோகமயமாக செல்கிறது. எந்த பெரிய சண்டைக் காட்சிகளும் இடம் பெறவில்லை. தோர் மற்றும் ஹல்கை இந்த படத்திலும் காமெடி அம்சங்களாகவே மாற்றியுள்ளது. தமிழில் படத்தை பார்க்க செல்பவர்களுக்கு விஜய் சேதுபதி வாய்ஸ் என்ன கொடுமை சார்? என்றே சொல்ல தூண்டுகிறது.

மொத்தத்தில் பத்தாண்டுகால மார்வெல் திரையுலகம் நல்ல நிறைவைத் தந்துள்ளது. அடுத்து வெளியாகவுள்ள ஸ்பைடர்மேன், பிளாக் விடோ படங்கள் ப்ரீக்குவலாக இருக்கும் என எண்ணுகிறோம்.

மேலும், டோனி ஸ்டார்க் இல்லாத அவெஞ்சர்ஸ் அணி மீண்டும் இணையுமா? என்ற பில்லியன் டாலர் கேள்வியும் எழுந்துள்ளது.

 

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?