Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தின் பல இடங்களில் மின்வெட்டு: திமுக ஆட்சி என்றாலே இப்படித்தான் என மக்கள் புலம்பல்

Published

on

நேற்று தமிழகத்தின் பல இடங்களில் பகல் இரவு என பாரபட்சம் இன்றி மின்வெட்டு ஏற்பட்டதை அடுத்து திமுக ஆட்சி என்றாலே இப்படித்தான் என பொதுமக்கள் புலம்பத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெற்றபோது மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்த நிலையில் திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே மின்வெட்டும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கோடை வெயில் தற்போது சுட்டெரிக்கும் நிலையில் திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரவு பகல் என பாரபட்சமின்றி அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மின்வெட்டு காரணமாக வீடுகளுக்குள் இருக்க முடியாமல் மக்கள் வீதியை நோக்கி படை எடுத்து வருவதாகவும் குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 6 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டதால் பரீட்சை நேரத்தில் உள்ள மாணவர்கள் கடும் அவதிப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டதாகவும் இரவில் மூன்று மணி நேரத்திற்குமேல் மின்வெட்டு ஏற்படுவதால் புழுக்கம் தாங்காமல் வீடுகளைவிட்டு நள்ளிரவில் பொதுமக்கள் வெளியே வந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தேனி திருவண்ணாமலை தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பகல் நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய தொகுப்பில் இருந்து 750 மெகாவாட் மின்சாரம் தடைபட்டதால் தான் ஒரு சில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இருப்பினும் நிலைமையை சரிசெய்ய அடுத்த சில நிமிடங்களில் மின்உற்பத்தி அதிகமாக்கி மின்வெட்டை தவிர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?