இந்தியா
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தடுப்பூசி போட மறுக்கும் முதியவர்கள்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து நேற்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.
நாடு முழுவதும் பல மையங்களில் காலையிலிருந்தே முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் முதியவர்கள் பலர் மகிழ்ச்சியுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் டெல்லியில் கடந்த மூன்று மாதங்களாக மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தடுப்பூசி போட மாட்டோம் என டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள ஒருசில முதியவர்கள் மறுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் எங்களுடைய விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளமாட்டோம் என்றும், எங்களுக்கு தடுப்பூசி தேவையில்லை என்றும் விளைநிலங்களில் நாங்கள் கடுமையாக உழைப்பதால் எங்களை எந்த வைரஸும் ஒன்றும் செய்யாது என்றும் நாங்கள் எந்த கொரோனாவுக்கும் பயப்பட மாட்டோம் என்றும் விவசாயிகள் கூறி வருகின்றனர்.
மேலும் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தால் மட்டுமே நாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோம் என ஒருசில விவசாயிகள் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




















