Connect with us

ஆன்மீகம்

சூரிய கிரகணம் 21.09.2025 – இன்று நடைபெறும் இரண்டாவது மற்றும் கடைசி கிரகணம்!

Published

on

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இன்று (செப்டம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இது அமாவாசை நாளுடன் சேர்ந்து வரும் காரணத்தால், சர்வ பித்ரு அமாவாசையும் இன்று நடைபெறுகிறது. மறுநாளே நவராத்திரி தொடங்க இருப்பதால், இன்றைய கிரகணம் மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கிரகண நேரம்:
இந்த சூரிய கிரகணம் செப்டம்பர் 21 இரவு 11 மணிக்கு தொடங்கி, அதிகாலை 3:23 மணி வரை நீடிக்கும்.

இந்தியாவில் தெரியும் தானா?
இது பகுதி சூரிய கிரகணம் என்பதால், இந்தியாவில் காண முடியாது. எனவே சூதக்காலம் (Sutak) கடைபிடிக்க தேவையில்லை. ஆனால் ஜோதிட ரீதியாக சில செயல்களை தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

கிரகண காலத்தில் செய்யக்கூடாதவை:

  • உணவு, தண்ணீர் அருந்தக்கூடாது.

  • நகங்கள் வெட்டுதல், முடி சீவுதல், பல் துலக்குதல் போன்ற செயல்களை தவிர்க்கவும்.

  • சுபகாரியங்களை நடத்தக்கூடாது.

  • தூங்காமல் தவிர்க்க வேண்டும்.

கிரகணத்தின் போது செய்யவேண்டியது:

  • அனைத்து உணவிலும் துளசி இலை அல்லது அருகம்புல் இலை வைத்து பாதுகாக்க வேண்டும்.

  • கிரகணத்திற்குப் பிறகு குளித்து சாப்பிட வேண்டும்.

  • தியானத்தில் ஈடுபடுவது மிகவும் சிறப்பானது. கிரகணம் அமைதியை குறிக்கும் நேரம் என்பதால், இந்த நேரத்தில் தியானம் மனநிம்மதியையும் ஆன்மீக வளர்ச்சியையும் தரும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Embed videos directly on your page, showcase your music playlists, add countdown timers for your next launch, and much more..