Connect with us

ஆன்மீகம்

Solar Eclipse 2025: செப்டம்பர் 21 ஆம் தேதி இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம்!

Published

on

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இன்று, செப்டம்பர் 21, 2025, ஞாயிற்றுக்கிழமை நிகழவுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 4 கிரகணங்கள் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது: 2 சூரிய கிரகணங்கள் மற்றும் 2 சந்திர கிரகணங்கள். இதற்குள் ஏற்கனவே 1 சூரிய கிரகணம் மற்றும் 2 சந்திர கிரகணங்கள் நடைபெற்றுள்ளன.

கடந்த மாதம் செப்டம்பர் 7-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது, பலரும் ரத்த கலர் நிலவை நேரில் பார்த்து மகிழ்ந்தனர்.

இந்த மாதத்திலேயே 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் நடக்கவுள்ளது. இது அமாவாசை நாளில், அதாவது செப்டம்பர் 21, 2025 அன்று நடைபெறும். அதே நாளில் சர்வ பித்ரு அமாவாசை நிகழவும், மறுநாள் நவராத்திரி பண்டிகை தொடங்கும்.

கிரகண நேரம்:

  • தொடக்கம்: செப்டம்பர் 21, 2025, இரவு 10:59

  • முடிவு: செப்டம்பர் 22, 2025, அதிகாலை 3:23

  • நீளம்: சுமார் 4.5 மணி நேரம்

  • அஷ்வின் மாத கிருஷ்ண பக்ஷ அமாவாசை நாளில் நடைபெறும்.

இந்தியாவில் தெரியுமா?

இந்த சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணம் ஆகும். மேலும், இரவில் நிகழுவதால் இந்தியாவில் இதனை காண முடியாது.

சூரிய கிரகணம் எங்கு தெரியும்?

இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாவிட்டாலும், கீழ்க்காணும் பகுதிகளில் தெளிவாகக் காணப்படும்:

  • தெற்கு பசிபிக் பெருங்கடல்

  • நியூசிலாந்து

  • ஆஸ்திரேலியா

  • ஆப்பிரிக்கா

  • இந்தியப் பெருங்கடல்

  • அட்லாண்டிக் பெருங்கடல்

  • தென் பெருங்கடல்

  • பாலினீசியா, மெலனேசியா

  • நோர்போக் தீவு, கிறைஸ்ட்சர்ச், வெலிங்டன்

இந்த சூரிய கிரகணம் விண்வெளி ஆர்வலர்களுக்கும், கிரகண பார்வையாளர்களுக்கும் மிகவும் முக்கியமானது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Search engines prefer relevant and natural links, and ai chatbots cite the same trustworthy sources..