சினிமா
காதலர் தினத்துக்கு மாஸ் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்குழு!

காமெடி நடிகர் யோகி பாபுவை வைத்து வித்தியாசமான அரசியல் சட்டையர் படமாக மண்டேலா படத்தை கொடுத்து ஒட்டுமொத்த திரையுலகின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியவர் இயக்குநர் மடோன் அஸ்வின்.
மண்டேலா படத்திற்காக தேசிய விருது வரை வென்ற மடோன் அஸ்வின் இயக்கத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். பரத் சங்கர் இசையமைத்து வருகிறார்.

#image_title
காதலர் தினத்துக்கு கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் பாடிய அரபிக் குத்து பாடல் வெளியானது. இந்த ஆண்டு எந்தவொரு மாஸ் அப்டேட்டும் வரலையே என ரசிகர்கள் அப்செட்டாக இருந்த நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயன் பட அப்டேட் வெளியாகி உள்ளது.
மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ள மாஸ் அப்டேட்டை தான் தற்போது Get Ready to Celebrate Maaveeran soon என போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

#image_title
சிவகார்த்திகேயன் – அனிருத் காம்போவில் வெளியான பாடல்கள் எல்லாம் ஹிட் அடித்து வந்த நிலையில், சிவகார்த்திகேயன் – பரத் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் மாவீரன் பாடல்கள் எப்படி இருக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த வார இறுதிக்குள் மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் படம் சொதப்பிய நிலையில், மாவீரன் படம் சிவகார்த்திகேயனுக்கு இமிடியேட் கம்பேக்காக அமையும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.





















