டிவி
“Cook With Comali”-யில் சிவகார்த்திகேயன் என்ட்ரி; ஆர்ப்பரித்த அரங்கம்!
Published
2 years agoon
By
Barath
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி டிவி நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இது ஒரு சமையல் சார்ந்த ஷோ என்றாலும், இதில் வரும் கோமாளிகளின் சேட்டைகளுக்காகவே உலகப் புகழ் பெற்ற நிகழ்ச்சியாக மாறிவிட்டது. ஒரு சீசன் முடிந்த தற்போது இரண்டாவது சீசனிலும் பட்டையைக் கிளப்பி வருகிறது ‘குக் வித் கோமாளி’.
முதல் சீசனில், வனிதா விஜயகுமார், பட்டத்தை வென்றிட, தற்போது இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் இந்த வாரம் ‘பொங்கல் கொண்டாட்ட வாரமாக’ குக் வித் கோமாளியில் கொண்டாடப்படுகிறது. இதனால் எந்த எலிமினேஷனும் இருக்காது. அதே நேரத்தில் பழைய போட்டியாளர்களும் பங்கு பெறுவார்கள். இதனால், கூடுதல் உற்சாகத்துடன் நிகழ்ச்சி இருக்கும்.
இப்படி சிறப்புக்கே சிறப்பு சேர்க்கும் வகையில், நடிகர் சிவகார்த்திகேயன், இந்த வார குக் வித் கோமாளியின் சிறப்பு அழைப்பாளராக வந்துள்ளார். இது குறித்தான ப்ரொமோ வெளியாகி படு வைரலாக மாறி வருகிறது. சிவகார்த்திகேயன், தன் கலை வாழ்க்கையை விஜய் டிவியிலிருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வென்ற எஸ்.கே, தொடர்ந்து டிவியின் ஹோஸ்டாக உயர்ந்தார். அங்கிருந்து நேராக வெள்ளித்திரையில் காமெடியனாக என்ட்ரி கொடுத்து, கிடுகிடுவென ஹீரோவாக பரிணமித்தார். இன்று தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் உள்ளார்.
ப்ரொமோ வீடியோ:
You may like
-
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜிபி முத்துவுக்கு அடித்த ஜாக்பாட்!
-
விஜய் டிவி திடீர் எச்சரிக்கை அறிவிப்பு.. குழப்பத்தில் ரசிகர்கள்!
-
அஜித்துடன் மோத முடிவு செய்துவிட்ட சிவகார்த்திகேயன்: ஒரே நாளில் ரிலீஸ்!
-
பிரின்ஸ் சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற டைட்டில்: ‘எஸ்கே 20’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் இதோ!
-
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு செம அப்டேட்!
-
இந்திய சினிமாவின் ’டான்’ உடன் ஒரு சந்திப்பு: சிவகார்த்திகேயன் டுவிட்