கிரிக்கெட்
INDvENG – குல்தீப்பின் கழுத்தை நெரிக்கும் சிராஜ்… டிரெஸ்ஸிங் அறையில் நடந்த பகீர் சம்பவம்; வைரல் வீடியோ

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னையில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் போது நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரை வேகப் பந்து வீச்சாளர் முகமது சிராஜ், மற்றும் சுழற் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் 11 பேரில் இல்லை. அவர்கள், அணியினருக்கு டிரிங்ஸ் எடுத்துச் செல்வது மற்றும் பயிற்சியில் ஈடுபடது போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்நிலையில் டிரெஸ்ஸிங் அறையில் அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ கசிந்து காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
காணொலியில் சிராஜ், குல்தீப்பின் பின் கழுத்தைப் பிடித்து இறுக்குகிறார். அருகில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நின்றிருக்கிறார். மற்ற யாரும் அருகில் இருக்கவில்லை. ஒரு சில நொடிகளே ஓடும் வீடியோவில் அதற்கு மேல் என்ன நடந்தது என்பது குறித்து தெரியவில்லை. இருப்பினும் ரசிகர்களுக்கு இந்த சில நொடி பதிவே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முன்னதாக இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 578 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா, இங்கிலாந்தை விட 241 ரன்கள் பின் தங்கிய நிலையில் தான் உள்ளது. இதன் மூலம் இந்தியா, ஃபாலோ-ஆன் ஆகியுள்ளது.
தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி, 42 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.