Connect with us

வணிகம்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: ரூ.60 லட்சம் முதலீட்டில் 5 ஆண்டுகளில் ரூ.24 லட்சம் வருமானம்!

Published

on

மூத்த குடிமக்களுக்கு ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்பான வருமானம் தேவைப்படும் சூழ்நிலையில், இந்திய அரசின் SCSS – Senior Citizens Savings Scheme, சிறந்த தேர்வாக அமைகிறது. இது குறைந்த ஆபத்து, அதிக வட்டி மற்றும் வரிச் சலுகைகள் ஆகியவற்றை வழங்கும் சிறப்பான திட்டமாகும்.

SCSS திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • அரசு ஆதரவுடன் வழங்கப்படும் திட்டம்

  • ஆண்டுக்கு 8.2% வட்டி

  • குறைந்தபட்ச முதலீடு: ₹1,000

  • அதிகபட்ச முதலீடு: ஒரு கணக்குக்கு ₹30 லட்சம்

  • தனிநபரா அல்லது தம்பதியராகவோ கணக்குத் திறக்கலாம்

  • வட்டி: காலாண்டு அடிப்படையில் வழங்கப்படும்

  • முதிர்ச்சி காலம்: 5 ஆண்டுகள் (அதன்பின் நீட்டிக்கலாம்)

  • வரிச் சலுகை: 80C பிரிவின் கீழ் ₹1.5 லட்சம் வரையிலான முதலீடுக்கு சலுகை

ரூ.24 லட்சம் வருமானம் பெறும் திட்டமிடல்:

  • ஓய்வு பெற்ற தம்பதிகள் இருவரும் தனித்தனி SCSS கணக்குகளைத் திறக்கலாம்

  • தலா ₹30 லட்சம் என மொத்தம் ₹60 லட்சம் முதலீடு செய்யலாம்

  • ஆண்டுக்கு ₹4,81,200 வட்டி வருமானம் (₹1,20,300 ஒரு காலாண்டுக்கு)

  • 5 ஆண்டுகளில் மொத்தமாக ₹24,06,000 வட்டி வருமானம்

SCSS திட்டத்தின் நன்மைகள்:

  • நிலையான வருமானம் – ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி

  • அதிக வட்டி விகிதம் – FD, PPF ஆகியவற்றைவிட அதிகம்

  • பாதுகாப்பு – அரசின் உத்தரவாதத்துடன்

  • வரிச் சலுகை – முதலீட்டுக்கு வரிவிலக்கு

  • முடிவில் முதலீட்டு தொகை மீள பெற முடியும்

திட்டத்தில் சேர வழிமுறைகள்:

  • அருகிலுள்ள தபால் நிலையம் அல்லது பொதுத்துறை வங்கியில் SCSS கணக்கு திறக்கலாம்

  • வயது 60க்கும் மேற்பட்டவர்கள் அல்லது ஓய்வு பெற்ற அரசு/பொதுத்துறை ஊழியர்கள் இந்த திட்டத்தில் சேரலாம்

  • Aadhaar, PAN, புகைப்படம், ஓய்வு நற்சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவை

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Journalism covering breaking.