வணிகம்
வெளிநாட்டிலிருந்து தங்கம் கொண்டு வரும் ரகசிய விதிகள் – 2025 வழிகாட்டி!

வெளிநாட்டில் இருந்து தங்கம் வாங்கி வரலாமா? – இது பலருக்கும் உள்ள கேள்வி. குறிப்பாக வெளிநாட்டில் வேலை செய்து திரும்பும் இந்தியர்கள், தங்கம் எவ்வளவு அளவு கொண்டு வரலாம், எந்த சட்ட விதிகள் உள்ளன என்பதைக் தெரிந்து கொள்வது முக்கியம்.
சுங்கச் சட்டம், 1962 படி:
ஆண்கள்: ஆண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கி இருந்தால், அதிகபட்சம் 20 கிராம் தங்கம், மதிப்பு ₹50,000 வரை.
பெண்கள்: அதிகபட்சம் 40 கிராம் தங்கம், மதிப்பு ₹1,00,000 வரை.
நடைமுறை விளக்கம்:
ஆண்கள் சுமார் 5 கிராம், பெண்கள் சுமார் 10 கிராம் 22 காரட் தங்கத்தை வரம்பிற்குள் கொண்டு வர முடியும்.
அதிக தங்கம் கொண்டுவர விரும்பினால், தனிப்பட்ட விதிகள் உள்ளன.
குறைந்தது 6 மாதங்கள் வெளிநாட்டில் தங்கி, இந்தியாவில் 30 நாட்களுக்கு மேல் இல்லாதவர்களுக்கு:
10 கிலோ வரை தங்கம் கொண்டு வரலாம்
சுங்கவரி கட்டணம் கட்ட வேண்டும்
விமான நிலைய நடைமுறை:
தங்கம் கொண்டு வரும் போது, ‘ரெட் சேனல்’ வழியே செல்ல வேண்டும்
Form-1 மூலம் தங்க விவரங்களை பதிவு செய்ய வேண்டும் அல்லது Atithi App மூலம் முன்பே தகவல் கொடுக்கலாம்
விதிகளை பின்பற்றாதவர்கள் தங்கம் பறிமுதல் மற்றும் அபராதம் சந்திக்கலாம்
தனிப்பட்ட பயன்பாட்டிற்கான விதிகள்:
தனிப்பட்ட நகைகள் கொண்டு வருவோருக்கு சுங்கவரி விதி இல்லை
ஆனால், “தனிப்பட்ட பயன்பாடு” என்ற அர்த்தத்தை சுங்கத் துறை விளக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
