வணிகம்
மர்மமான உலகப் புதையல்கள்: தொலைந்து போன தங்கம், நகைகள் மற்றும் வரலாற்று ரகசியங்கள்

புதையல் வேட்டை எப்போதும் மனிதர்களுக்கு மிகுந்த சுவாரஸ்யத்தை தரும் ஒரு அனுபவமாகும். கடந்த கால பேரரசர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் தங்களது பொக்கிஷங்களை மறைத்து வைத்திருக்கும் மர்மம் இதன் முக்கிய அம்சமாகும். நாணயங்கள், தங்கம், நகைகள் மற்றும் வரலாற்று பொருட்கள் தொலைந்து போகும் செய்தி எப்போதும் புதையல் ஆர்வலர்களுக்கு விறுவிறுப்பாக இருக்கும்.
டாப்லிட்ஸ் ஏரி தங்கப்புதையல் – ஆஸ்திரிய ஆல்ப்ஸில் உள்ள டாப்லிட்ஸ் ஏரியில், இரண்டாம் உலகப் போரின் இறுதியில் நாஜிகள் பில்லியன் கணக்கான தங்கம், நாணயங்கள் மற்றும் நகைகளை மறைத்து வைத்ததாக வதந்தி உள்ளது. ஏரியின் ஆழம் மற்றும் சில பகுதிகளில் ஆக்ஸிஜன் இல்லாத நிலை, புதையலை கண்டுபிடிக்க முயற்சிக்கும் அனைவரையும் சவாலுக்கு உட்படுத்துகிறது. அமெரிக்க படை 1945-ல் ஜெர்மனியில் உள்ள மெர்க்கர்ஸ் உப்புச் சுரங்கத்தில் மறைக்கப்பட்ட நகைகள் மற்றும் தங்கத்தை கண்டுபிடித்தது.
ஆர்க் ஆஃப் கோவினன்ட் (Ark of the Covenant) – பைபிளில் பத்து கட்டளைகளின் கல் பலகைகள் இடப்பட்ட தங்கப்பெட்டி. கிமு 587-ல் ஜெருசலேம் அழிக்கப்பட்டபின் இதன் இடம் மர்மமாக மாறியது. பல கதைகள் சொல்வாலும், இதுவரை எந்த தொல்பொருள் ஆதாரமும் இல்லை.
ஃபேபர்கே முட்டைகள் – 1885 முதல் ரஷ்யாவின் ஜார் மன்னர்கள் தனக்கு பரிசாக வடிவமைத்த நகைமிகு முட்டைகள். அதில் சில மறைந்துவிட்டன, குறிப்பாக அலெக்சாண்டர் III நினைவு முட்டை.
கிங் ஜானின் நகைகள் – 1216-ல் இங்கிலாந்தின் மன்னர் ஜான் தனது நகைகள் மற்றும் அரச உடைமைகளை The Wash கடந்து செல்லும் போது இழந்தார். பல ஆய்வுகள் நடந்தாலும், இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
ஹோலி கிரேல் – கடைசி விருந்தில் இயேசு பயன்படுத்திய கோப்பை, அற்புத சக்திகள் கொண்ட பாத்திரம் என நம்பப்படுகிறது. இன்று வரை அது மறைந்திருக்கும்.
1907 ஐரிஷ் கிரீட நகைகள் – ஜூலை 6, 1907 அன்று டப்ளின் கோட்டையிலிருந்து மர்மமாக மறைந்தன. பொறுப்பில் இருந்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டாலும், மீட்கப்படவில்லை.
சீன இம்பீரியல் முத்திரை – கிமு 221-ல் சீனாவின் முதல் பேரரசருக்காக செதுக்கிய ஜேட் முத்திரை, சக்திவாய்ந்த அடையாளமாக இருந்தது. 10 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு அது மர்மமாக மறைந்தது.
