வணிகம்
SBI மியூச்சுவல் ஃபண்ட்: 26 ஆண்டுகளில் 1 லட்சம் முதலீடு 42 லட்சமாக உயர்ந்த கதை!

SBI மியூச்சுவல் ஃபண்ட்: 1 லட்சம் முதலீடு இன்று 42 லட்சம்!
முதலீட்டாளர்களுக்கு பொக்கிஷம் வழங்கியுள்ளதான் SBI Technology Opportunities Fund. கடந்த 26 ஆண்டுகளில் இந்த ஃபண்ட் முதலீட்டாளர்களின் பணத்தை 42 மடங்காக அதிகரித்துள்ளது.
1999-ல் ₹1 லட்சம் முதலீடு செய்திருந்தால், இன்று அந்த முதலீடு ₹41.82 லட்சம் ஆக மாறியிருக்கும். இது தவிர, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்நிதி 3.5 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது.
5 ஆண்டு செயல்திறன்:
ஆண்டு சராசரி வருமானம் (CAGR): 28.99% (நேரடி திட்டம்)
பெஞ்ச்மார்க் வருமானம்: 21.91%
5 வருடத்தில் ₹1 லட்சம்: ₹3.57 லட்சம்
SIP ரூ.5000 மாதம்: ₹4.76 லட்சம் (மொத்த முதலீடு ₹3 லட்சம்)
நிதி தொடங்கப்பட்ட நாள் முதல்:
26 வருட CAGR: 15.44%
₹1 லட்சம் ➡ ₹41.82 லட்சம்
நேரடி திட்டம் (2013-இல் தொடங்கியது): CAGR 21.09%
₹1 லட்சம் ➡ ₹10.89 லட்சம் (12.5 ஆண்டுகளில்)
ரூ.5000 மாதாந்திர SIP: ₹25.94 லட்சம் (மொத்த முதலீடு ₹7.20 லட்சம்)
வெற்றியின் காரணம்:
இந்த Mutual Fund தொழில்நுட்ப பங்குகளில் முதலீடு செய்வதால், TCS, Infosys, Bharti Airtel, Coforge, Microsoft, Cognizant போன்ற முன்னணி நிறுவனங்களின் வளர்ச்சியும் இதற்குப் பின்னணி.
