Connect with us

இந்தியா

ஃபிக்ஸட் டெபாசிட் கூட இனி நல்ல வருமானம் தரும்.. இன்று முதல் வட்டி உயர்வு!

Published

on

ஃபிக்ஸட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட் ஆகியவற்றில் அதிக வட்டி வராது என்றும் அதனால் அதில் முதலீடு செய்வதைவிட மியூச்சுவல் பண்டு உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதுதான் சிறந்தது என்றும் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை அளித்து வருகின்றனர்.

அதற்கு காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை ஃபிக்ஸட் டெபாசிட்டில் அதிகபட்சம் 5 சதவீதம் மட்டுமே வட்டி வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் 7 சதவீதம் உயர்ந்து வரும் நிலையில் 5% மட்டுமே வட்டி கிடைத்தால் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்டு உள்ளிட்டவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திக் கொண்டு வருவதையடுத்து ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்ந்து கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் 0.35 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து சில வங்கிகள் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் பாரத ஸ்டேட் வங்கி தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வை அறிவித்துள்ளது. சாதாரண பொதுமக்களுக்கு 6.9 சதவீதம் வரையும் மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீதம் வரையும் வட்டி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் பணவீக்கம் சுமார் 7 சதவீதம் இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 7 சதவீதம் பாரத ஸ்டேட் வங்கி பிக்சட் டெபாசிட்டிற்கு வட்டி வழங்கி வருவதை அடுத்து இனி பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடு செய்யும் பணத்திற்கு முழு பாதுகாப்பு, எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது உறுதியாக தெரியும் என்பதன் காரணமாக ஃபிக்ஸட் டெபாசிட்டில் அதிக நபர்கள் முதலீடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு சுமார் 7 சதவீதம் வருமானம் போதுமென்ற மனம் உள்ளவர்கள் தாராளமாக இனி பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யலாம் என தற்போது பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத ஸ்டேட் வங்கியை அடுத்து வேறு சில வங்கிகளும் விரைவில் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

புதுப்பிக்கப்பட்ட வட்டி விகிதம்:

7 முதல் 45 நாட்களுக்கான வட்டி: 3.50%   மூத்த குடிமக்களுக்கு 3.50%

46 முதல் 179 நாட்களுக்கான வட்டி: 5.00  மூத்த குடிமக்களுக்கு 5.00

180 முதல் 210 நாட்களுக்கான வட்டி: 5.75 மூத்த குடிமக்களுக்கு5.75

211 முதல் 1 நாட்களுக்கான வட்டி: 6.00     மூத்த குடிமக்களுக்கு6.25

1 வருடம் முதல் 2 வருடம் வரை 6.60        மூத்த குடிமக்களுக்கு 7.25

2 வருடம் முதல் 3 வருடம் வரை 6.75        மூத்த குடிமக்களுக்கு7.25

3 வருடம் முதல் 5 வருடம் வரை 6.60        மூத்த குடிமக்களுக்கு6.75

5 yவருடம் முதல் 10 வருடம் வரை 6.90    மூத்த குடிமக்களுக்கு7.25

 

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?