Connect with us

தமிழ்நாடு

கொரோனா மட்டுமல்ல… இத்தனை உடல் பாதிப்புகளுடன் இருக்கிறார் சசிகலா..! – விக்டோரியா மருத்துவமனை அறிவிப்பு

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலாவை, சிறை நிர்வாகம் நகர அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தது. அங்கு அவருக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், பெங்களூருவில் இருக்கும் விக்டோரியா மருத்துவமனையில் நேற்று மதியம் 2:30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அங்கு முழு உடல் சோதனை செய்யப்பட்டு, உடலில் உள்ள பிரச்சனைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியா மருத்துவமனை சசிகலாவின் உடல்நிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’66 வயதாகும் சசிகலா நேற்று மதியம் 2:30 மணிக்கு விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் தொண்டைப் பகுதியில் அதீத பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்றும் உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இருப்பது இரவு 9:30 மணிக்கு உறுதி செய்யப்பட்டது.

தற்போது அவருக்கு கோவிட்-19 தொற்றுடன் காய்ச்சல் இருக்கிறது. மேலும் இரண்டாம் நிலை நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் தைராய்டு பிரச்சனைகளும் உள்ளன. கோவிட்-19 வழிமுறைப்படி தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்’ என்று இன்று காலை 7 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் விக்டோரியா மருத்துவமனைத் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.

அரசு மருத்துமவனையில் சசிகலாவுக்கு சரி வர சிகிச்சை கொடுக்கப்படவில்லை என்று அவரது உறவினர்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வந்த நிலையில், அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், சசிகலாவின் நிலை குறித்து கூறும் போது, ‘சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்து 12 மணி நேரம் முடிவடைந்திருக்கிறது. ஆனால், இதுவரை அவரை நாங்கள் யாரும் நேரில் பார்க்கவில்லை. அவருக்கு யார் மருத்துவம் செய்து வருகிறார் என்பது கூட எங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

சசிகலாவுக்கு சி.டி ஸ்கேன் எடுப்பது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால், மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்து விட்டதாக சொல்கிறார்கள். சரி, மேல் சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்றாலும், யாரும் சரி வர தகவல்களை சொல்ல மறுக்கிறார்கள். உண்மையில், எங்களுக்கும் இதுவரை செவி வழிச் செய்திகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. முறையான தகவல்கள் வரவில்லை’ என்று விரக்தி மன நிலையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திவாகரன் அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில், ‘சசிகலாவின் உயிருக்கு சிலரால் ஆபத்து நேர்ந்துள்ளது’ என்றார்.

 

 

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?