சினிமா செய்திகள்
ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… பிப்ரவரி மாதமே ரிலீஸாகும் சந்தானத்தின் ‘பாரீஸ் ஜெயராஜ்’!

சந்தானம் மீண்டும் ஹீரோவாக கலக்க இருக்கும் திரைப்படம் ‘பாரிஸ் ஜெயராஜ்’. இந்தப் படம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
முன்னதாக சந்தானம் நடிப்பில் வெளியான ‘A1’ திரைப்பட கூட்டணி தான் இந்தப் படத்துக்கும் கை கோர்த்துள்ளது. ஏ1 படத்தை இயக்கிய ஜான்சன் தான் இந்தப் படத்தையும் இயக்குகியுள்ளார். அந்தப் படத்துக்கு இசையமைத்து தெறிக்கவிட்ட, சந்தோஷ் நாராயணன் தான் பாரிஸ் ஜெயராஜுக்கும் இசை.
A fun ride is on your way! Actor @iamsanthanam‘s #ParrisJeyaraj is releasing on February 12 ONLY in theatres ????#ParrisJeyarajFromFeb12
#JohnsonK #LarkStudios @Kumarkarupannan @Music_Santhosh @ArthurWisonA @iamsandy_off #AnaikaSoti @Sastika_R @thinkmusicindia pic.twitter.com/ukYOXWaLLs— Yuvraaj (@proyuvraaj) February 3, 2021
சில நாட்களுக்கு முன்னர், இந்தப் படத்தின் ‘புளி மாங்கா புளிப்பு’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சந்தானம் படத்திற்கு ஏற்றது போல, முழுக்க முழுக்க கானாவில் பின்னிப் பெடலெடுத்துள்ளார் சந்தோஷ் நாராயணன். ‘புள்ளிங்கோ’ பாடல்களை விரும்பும், கானாவுக்கு ஏங்கும் அனைவருக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்.
புளி மாங்கா புளிப்பு பாடல் வீடியோ:
பாரிஸ் ஜெயராஜ் படத்தின் டிரெய்லர்: