சினிமா
ஓ சொல்றியா மாமாவுக்கு.. ஊ ஊ சொன்ன சமந்தா? புஷ்பா 2வில் இல்லையாம்!

மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சமந்தா எழுந்து நடக்கவே முடியாது என தகவல்கள் வெளியாகின. ஆனால், பழனி மலையில் உள்ள 600 படிகளில் ஏறி தீபம் ஏற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் சமந்தா.
எந்தவொரு விஷயம் முடியாது என்கிறார்களோ அதை முடித்து காட்டுவது நடிகை சமந்தாவுக்கு மிகவும் பிடித்தமான விஷயம் போல, கடுமையான உடற்பயிற்சி மற்றும் சிகிச்சையை மேற்கொண்டு 6 மாத காலத்தில் கம்பேக் கொடுத்திருக்கிறார்.

#image_title
இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா குத்தாட்டம் போட்டிருந்தார்.
புஷ்பா 2 படத்திலும் சமந்தாவின் குத்தாட்டம் இடம்பெறும் என்றும் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து தான் 5 கோடி ரூபாய் சம்பளம் அவருக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

#image_title
நடிகை சமந்தா உடல்நலம் தேறி பாலிவுட்டில் சிட்டாடல் வெப்சீரிஸில் வருண் தவான் உடன் இணைந்து நடிக்க உள்ள நிலையில், புஷ்பா 2 படத்திலும் அவர் நடனமாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமீபத்தில், புஷ்பா 2 பட ஆஃபரை சமந்தா வேண்டாம் என மறுத்து விட்டதாகவும் அந்த படத்தில் மட்டுமில்லை இனி எந்த படத்திலும் குத்தாட்டம் போடப்போவதில்லை என்றும் அதிரடியாக கூறி விட்டதாக கூறுகின்றனர்.
உடல் நலக்குறைவு காரணமாக ஆட மறுத்து விட்டாரா அல்லது இமேஜ் டேமேஜ் ஆகாமல் தவிர்க்க இப்படியொரு முடிவா? என டோலிவுட் வட்டாரத்தில் பலரும் பேசி வருகின்றனர்.




















