உலகம்
மலப்புரத்தில் வலதுசாரிகள் நடத்திய மாஸ் போராட்டம் பஞ்சர் ஆன கதை.. குபீர் வீடியோ!

திருவனந்தபுரம்: கேரளாவில் வலதுசாரி அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டம் எடப்பாலில் நடந்த கலவரத்தின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. வலதுசாரி அமைப்பினர் கத்திக் கொண்டே நூற்றுக்கணக்கில் பைக்கில் வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்காக டிராபிக் மொத்தம் நிறுத்தப்பட்டுள்ளது. 100 பேர் வரை இப்படி கத்திக் கொண்டே வருகிறார்கள்.
அந்த நேரம் பார்த்து, சரியாக அங்கே வந்த கம்யூனிஸ்டுள் போராட்டக்காரர்களின் பைக்குகளை துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள்.
இதனால் பயந்த போராட்டக்காரர்கள் மொத்தமாக பைக்கை போட்டுவிட்டு காணாமல் போனார்கள். 30 நொடியில் இருந்தவர்கள் எல்லாம் மொத்தமும் காணாமல் போய் இருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது.





















