உலகம்
ராணுவ டீலிங் மூலம் டீலிங் முடிக்கவில்லை.. ராகுலை கிண்டல் செய்த நிர்மலா!

டெல்லி: காங்கிரஸ் கட்சியை போல நாங்கள் ராணுவ டீலிங்கை வைத்து ”டீலிங்” முடிக்கவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸை கிண்டல் செய்தார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று லோக் சபாவில் ரபேல் ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். ரபேல் ஒப்பந்தம் ஏன் செய்யப்பட்டது, எப்படி செய்யப்பட்டது என்று விளக்கி கூறினார்.
இதில் காங்கிரஸ் மீது அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். ரபேல் பற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புகார்களுக்கு அவர் பதில் அளித்தார்.
அவர் தனது பேச்சில், பக்கத்து நாடுகள் எல்லாம் ராணுவ பாதுகாப்பில் வேகமாக வளர்கிறார்கள். அவர்கள் இந்தியா வளர வேண்டும் என்று காத்திருக்கவில்லை. சீனாவும், பாகிஸ்தானும் மிகவும் வேகமாக வளர்ந்துவிட்டது. அவர்கள் தங்கள் ராணுவத்திற்கு புதிய உபகரணங்களை வாங்கி குவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.



















