தமிழ்நாடு
மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்: மீண்டும் வருகிறது கொரோனா கட்டுப்பாடு!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து நான்காம் அலை வந்து விட்டதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் ஆயிரத்து 300க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் முதல் அலை இரண்டாவது அலைபோல் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டின் தொடக்கமாக கோவையில் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் மாஸ்க் இல்லாமல் வெளியே சுற்றினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோவையில் ஆரம்பித்துள்ள இந்த மாஸ்க் கட்டுப்பாடு சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.