Connect with us

சினிமா

அலெக்ஸ் இன் ஒண்டர்லாண்ட் விமர்சனம்… இசையை வைத்து ஒரு வெடி வெடித்து இருக்கிறார் அலெக்ஸ்… எப்படி..?

Published

on

நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பின இன்று ‘அலெக்ஸ் இன் ஒண்டர்லேண்ட்’ பார்த்து முடித்தாகிவிட்டது. கிட்டத்தட்ட 2.13மணி நேர ஸ்டேண்ட் அப் காமெடி நிகழ்ச்சி… அலெக்சாண்டர் பாடி… நடித்து… இசைத்து அசத்தியிருக்கிறார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தன்மை தங்களுடைய நடவடிக்கையில் திரும்ப திரும்ப வந்திருக்கும். அதை அவர்கள் தெரிந்தெல்லாம் செய்ய மாட்டார்கள். இயல்பாக வரும். பேசும் போது சிலர் ஒரே வார்த்தையை பயன்படுத்துவது… எழுதும்போது ஒரு குறிப்பிட்ட சொல்ல பயன்படுத்துவது என்று. சினிமாவிலும் அதற்கு விதிவிலக்கு இல்லை. மணிரத்னம் புராண கதைகளை நவீனமாக்குவது… கதாபாத்திரங்கள் எல்லாம் மெதுவாக பேசுவது… சங்கர் பிரமாண்டம், சுந்தர் சி. நகைச்சுவை, ஹரி வேகம்… சுமோ பறப்பது… இப்படி. அதேபோலத்தான் இசையிலும் இருக்கும். இல்லையா? அப்படி தமிழ் இசை அமைப்பாளர்கள்… பாடலாசிரியர்கள் ஒரே வகைக்குள் மாட்டிக்கொண்டிருப்பார்கள் இல்லையா அதை பிடித்துக்கொண்டு தன்னுடைய முழு நகைச்சுவை நிகழ்ச்சியையும் கொடுத்துள்ளார். எப்படி… பார்க்கலாம்… இல்லை இல்லை… வாசிக்கலாம்… பிறகு பார்க்கலாம்…

உலகம் முழுவதும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியின் வீடியோ அமேசான் ப்ரைமில் வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான வரவேற்பை பெற்றுள்ளது அந்த வீடியோ.

அலெக்சாண்டர், ராமநாதபுரத்து இஞ்சினியர். படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையை எனக்குத் தெரிந்து எந்த இஞ்சினியரும் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அலெக்சுக்கும் அது பொருந்தும். 15ஆண்டுகளுக்கும் மேலாக சாப்ட்வேர் இஞ்சினியராக இருந்தவர் தன் குழந்தை பருவ விருப்பமான கலையை தேர்ந்தெடுத்து வேலையை விட்டு விலகி உள்ளார். சின்ன சின்ன காமெடி ஷோக்களை நடத்திய அலெக்ஸ் தனக்காக தேர்ந்தெடுத்துக்கொண்ட வழி பாடலோடு காமெடி செய்வது. தமிழ் பாடல்கள், கர்நாடக இசை என அனைத்தும் கலந்து கட்டி காமெடி செய்து பெரிய வரவேற்பை பெற்றார்.

இந்த அலெக்ஸ் இன் ஒண்டர்லேண்ட் நிகழ்ச்சி அப்படி ஒரு நிகழ்ச்சிதான். இளையராஜா, எம்எஸ்வி, ஏ.ஆர்.ரஹ்மான் என இசை அமைப்பாளர்களையும் ரஜினி, கமல் என நடிகர்களையும் கலந்து இறங்கி அடித்து ஆடியிருக்கிறார். பாடியும் இருக்கிறார். பாடர்களில் சீர்காழி, எஸ்பிபி, யேசுதாஸ், கமல், மலேசியா வாசுதேவன் என எல்லோரையும் கலந்துகட்டி அடித்திருக்கிறார். ச்சே…ச்சே… பாடியிருக்கிறார்…

மலேசியா வாசுதேவனுக்கு கிடைக்காத இடம்… எஸ்பிபி பாடலின் வெரைட்டி, யேசுதாஸ் பாடல்கள் ஒரே மாதிரியாக இருக்கும் தன்மை என அனைத்தையும் விமர்சனம் செய்து பாராட்டியும் இருக்கிறார். அதாவது ஈயம் பூசினா மாதிரியும் இருக்கிறது… பூசாத மாதிரியும் இருக்கிறது அலெக்ஸின் கலாய்… இதே பார்மேட்டைத்தான் இசை அமைப்பாளர்களுக்கும் பயன்படுத்தியிருக்கிறார்.

இளையராஜாவின் கோரசில் இருப்பவர்கள் தொடர்ந்து கோரசிலேயே இருப்பவர்களாகவே இருக்கிறார். திறமைசாலிகளை கண்டுகொள்வதில்லை. கண்டுகொண்டாலும் அவர்களுக்கான அடையாலம் கொடுப்பதில்லை எனக் கூறுகிறார் அலெக்ஸ். மேலும், இளையராஜா பாடலின் பிளஸ் மைனஸ் எல்லாமே அந்த கோரஸ்தான் எனக் கூறும் அலெக்ஸ் இளையராஜாவின் அட்டகாச பாடல்களையும் பாராட்டத் தவறவில்லை. அதே நேரத்தில் விஸ்வநாதன் ஒரே தாளத்தை எல்லா எமோசனுக்கும் பயன்படுத்தியுள்ளார் எனக் கூறும் அலெக்ஸ் உள்ளத்தில் நல்ல உள்ளம் போன்ற பல பாடல்களை சுட்டிக்காட்டி பாடியுள்ளார். ரஹ்மான் இசையையும் அவர் பாடும் விதத்தையும் கேலி செய்துள்ள அலெக்ஸ் அதிகமாக அவரை சீண்டவில்லை என்றுதான் கூறவேண்டும். பாடல்களில் ரஜினி,  கமலின் நடன அசைவுகளை கேளி செய்கிறார் அலெக்ஸ்.

அலெக்சின் மிகப்பெரிய பலம் அவரது இசை ஞானம். எல்லா கருவிகளையும் அவரே இசைக்கிறார். அவரது குரல்… எல்லோரைப் போலவும் அவர் மிமிக்கிரியும் செய்கிறார். இரண்டு மணி நேரமும் ரசிகர்களை உட்கார வைக்க முடியாத பல சினிமாக்கள் வெளிவரும் சூழலில் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். பல இடங்களில் ரசிகர்கள் ஆரவாரம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இரண்டாம் பாதியில் ஒரு தொய்வு இருக்கிறது என்றாலும் ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் உண்மையில் பெரிய வெற்றிதான்.

இளையராஜாவை அதிகமாக விமர்சிக்கும் அலெக்ஸ் ரஹ்மான் எனும்போது கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கிறார். இதை குறை என்று பார்த்தாலும் அது அவரது வழிமுறை என்றும் சொல்லலாம். நிச்சயம் இப்படி நிகழ்ச்சிக்குச் செல்வோர் பெரும்பாலும்பாலனவர்கள் 2கே கிட்ஸாகத்தான் இருப்பார்கள். அவர்களில் பெரும்பாலும் ரஹ்மான் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களிடம் போய் ரஹ்மானை கேளி செய்தால் எப்படி இருக்கும்.

மூன்று ஆண்டுகால உழைப்பு ஓரிடத்தில் கூட தொய்வில்லை. பாடல்கள் அனைத்தும் பிரபலமானவை. அதெல்லாம் கூட இந்த நிகழ்ச்சியின் வெற்றிதான். தன் ஆடியன்ஸ் யார் என்று தெரிந்து வைத்திருப்பதால் அவரால் இந்தப் பெரிய வெற்றியை சாத்தியமாக்க முடிந்துள்ளது. ஒரு விடுமுறை நாளில் தன் இணையருடன் (காதலன், காதலி, மனைவி, கணவன்) அமர்ந்து 2மணி நேரத்தை உற்சாகமாக போக்க நிச்சயம் இந்த அலெக்ஸ் இன் ஒண்டர்லாண்ட் உதவும்…

பி.கு. இது கொஞ்சம் எலைட் ரசிக மனோபாவம் உடையவர்களுக்கான நிகழ்ச்சி…

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
No fewer than 7 people have died as suspected herdsmen attack plateau state community infinity loaded. hospital jobs. indian navy ssr medical assistant recruitment notification 2024 : apply online the indian navy is recruiting for the post of senior ….