வணிகம்
8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம்? கம்யூடட் பென்ஷன் காலம் 15 ஆண்டிலிருந்து 12 ஆண்டுகளாக குறையுமா?

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்காக ஒரு முக்கிய மாற்றத்தை பரிசீலித்து வருகிறது. 8வது ஊதியக்குழுவின் விவாதங்களில், கம்யூடட் பென்ஷன் (Commuted Pension) மீட்பு காலம் குறைக்கப்படுமா என்ற கேள்வி ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஓய்வு பெறும் போது ஊழியர்கள், தங்களது ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை ஒரே தடவையில் பெறும் வசதி பெற்றுள்ளனர். இதுவே கம்யூடட் பென்ஷன் என அழைக்கப்படுகிறது. ஆனால், இந்த தொகை மாதாந்திர ஓய்வூதியத்திலிருந்து 15 ஆண்டுகள் வரை கழிக்கப்படுகிறது. இதனால், ஓய்வூதியதாரர்கள் 15 ஆண்டுகள் கழித்துதான் முழு ஓய்வூதியத்தைப் பெற ஆரம்பிக்கிறார்கள்.
இப்போது, ஊழியர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், இந்த மீட்பு காலத்தை 15 ஆண்டுகளிலிருந்து 12 ஆண்டுகளாகக் குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இது 8வது ஊதியக்குழுவின் ஆலோசனைகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளாகக் குறைத்தால் கிடைக்கும் நன்மைகள்:
ஓய்வூதியதாரர்கள் 3 ஆண்டுகள் முன்னதாகவே முழு ஓய்வூதியத்தைப் பெறுவார்கள்.
வயது முதிர்வில் மருத்துவ செலவுகள் மற்றும் குடும்பச் செலவுகளை எளிதில் சமாளிக்க முடியும்.
அரசாங்கத்தின் நிதிச் சுமையும் அதிகமாக கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால், வருங்காலத்தில் அதிக நிதி நிவாரணம் கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இது, அவர்களது மாதாந்திர வருமானத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும்.




