Connect with us

ஆன்மீகம்

297 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய ஆறு கிரக சேர்க்கை: மகரம், கும்பம், துலாம் ராசிகளுக்கு அதிர்ஷ்ட பண மழை!

Published

on

297 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் ஆறு கிரக அரிய சேர்க்கை – சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு!

வேத ஜோதிடக் கணிப்புகளின்படி, 2025 ஆகஸ்ட் 10 அன்று, ரக்ஷா பந்தன் நாளில், 297 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய ஆறு கிரகச் சேர்க்கை நிகழ உள்ளது. கடந்த முறையாக இது 1728 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த வானியல் நிகழ்வில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஒரே நேர்கோட்டில் அல்லது நெருங்கிய நிலையில் அமையும்.

இந்த ஆண்டு சூரியன் கடக ராசியிலும், சந்திரன் மகர ராசியிலும், செவ்வாய் கன்னி ராசியிலும், புதன் கடக ராசியிலும், குரு மற்றும் சுக்கிரன் மிதுன ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் இருப்பார்கள். இதனால், குறிப்பாக மகரம், கும்பம், துலாம் ராசிக்காரர்கள் மிகப்பெரிய நன்மைகளைப் பெறுவார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.


மகரம் (Capricorn)

மகர ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு கிடைக்கும். முதலீடுகளில் லாபம், குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகள், வேலைக்குச் செல்லும்வர்களுக்கு பதவி உயர்வு, கூட்டு வியாபாரத்தில் அதிக லாபம், சட்ட விஷயங்களில் சாதகமான முடிவுகள், தொழிலில் புதிய சாதனைகள் கிடைக்கும். சேமிப்பில் வெற்றி கிடைக்கும்.

கும்பம் (Aquarius)

கும்ப ராசிக்காரர்கள் மரியாதையும், நல்ல செய்திகளையும் பெறுவார்கள். வாகனம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டு. வேலைப்பகுதியில் புதிய வாய்ப்புகள், வெளிநாட்டுப் பயணம், நிதி நிலை மேம்பாடு, பதவி உயர்வு போன்ற நன்மைகள் கிட்டும்.

துலாம் (Libra)

துலாம் ராசிக்காரர்களுக்கு தடைப்பட்டிருந்த பணிகள் நிறைவேறும். சிக்கியிருந்த பணம் திரும்ப வரும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு புதிய வேலை, தொழில் செய்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள், நல்ல நிதி லாபம், மாணவர்களுக்கு படிப்பில் வெற்றி மற்றும் புதிய திறன்களை கற்றுக்கொள்ள நல்ல காலம்.

Translate »
Run enrollment windows and launch discounts with countdown timers that drive action..