தமிழ்நாடு
முதல்வர் ஸ்டாலினுக்கு வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை மார்ச் 1-ஆம் தேதி நாளைய தினம் கொண்டாட உள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபல நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

#image_title
தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பல்வேறு பிரபலங்கள், தலைவர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். முன்னதாக இன்று முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வணக்கம், என்னுடைய இனிய நண்பர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும் என்று அவரது 70-வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.