சினிமா செய்திகள்
விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தில் ரஜினிகாந்த் – ஷாருக்கான்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஆகிய இருவரும் இன்று நடைபெற்ற விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இன்று மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் மிகவும் சிறப்பாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணத்தில் அழைப்பிதழ் கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் பத்திரிகையாளர் உள்பட வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது.
ஆனால் அதே நேரத்தில் இன்று நயன்தாராவின் திருமணத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சுமார் ஒரு லட்சம் பேருக்கு திருமண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. முதியோர் இல்லம், அனாதை இல்லம், சிறுவர் இல்லம் ஆகிய இடங்களில் இன்று நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு சிறப்பு விருந்து நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற நயன்தாராவின் திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.