இந்தியா
டெல்லியில் புதிய திருப்பம்.. மீண்டும் காங்கிரஸ் – ஆம் ஆத்மி பேச்சுவார்த்தை?

டெல்லி: டெல்லியில் புதிய திருப்பமாக ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
ஒரு காலத்தில் காங்கிரசின் டெல்லி ஆட்சியையும், அப்போதைய டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தையும் எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியை தொடங்கியவர்தான் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போது அதே காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி வைக்க இருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி உருவான போதே இது குறித்து விவாதம் செய்யப்பட்டது. ஆனால் ஆம் ஆத்மி- காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை எதுவும் நடக்காமல் இருந்தது.
காங்கிரஸ் பேச்சுவார்த்தையை நடத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தது. இதனால் கோபம் அடைந்த அரவிந்த் கெஜ்ரிவால், நான் எவ்வளவோ முயன்றுவிட்டேன். ஆனால் காங்கிரஸ் கொஞ்சம் கூட இறங்கி வரவில்லை. இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டால், பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் காங்கிரஸ் அதை புரிந்துகொள்ளாமல் இருக்கிறது, என்று புலம்பி இருந்தார்.




















