ஆன்மீகம்
புரட்டாசி மாத ராசிபலன் 2025 – அதிர்ஷ்டம் பெருகும் ராசிகள் யாவை?

புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், சூரியன் கன்னி ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவராகக் கருதப்படும் சூரியன், ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்குச் செல்லும் போது புதிய தமிழ் மாதம் பிறக்கிறது. இவ்வாண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் நுழைந்ததால், புரட்டாசி மாதம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் மிகுந்த அதிர்ஷ்டம், நிதி ஆதாயம் மற்றும் தொழில்வாழ்க்கையில் முன்னேற்றத்தை தருகிறது.
🔮 விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11-ஆம் வீட்டில் சூரியன் பயணிப்பதால், புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் ஈடுபடுவோருக்கு சிறப்பான லாபம் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு சந்தோஷமான செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடும். பங்குச்சந்தை மற்றும் லாட்டரி போன்ற திடீர் வாய்ப்புகளால் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கலாம்.
🔮 தனுசு
தனுசு ராசியின் 10-ஆம் வீட்டில் சூரியன் இருப்பதால், வேலை மற்றும் வணிகத்தில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் முயற்சிகள் பாராட்டப்படும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். வணிகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஆதாயம் கிடைக்கும். இதுவரை இருந்த பண நெருக்கடிகள் குறையும்.
🔮 கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் சூரியன் இருப்பதால், தன்னம்பிக்கை உயரும். சமூகத்தில் மரியாதை, மதிப்பு அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். பேச்சுத்திறன் மேம்பட்டு, அதன்மூலம் பல வேலைகளை எளிதாக முடிக்கலாம். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த குடும்ப வாழ்க்கை அமையும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.



