Connect with us

தமிழ்நாடு

சொத்து வரி பெயர் மாற்றம்: இனி குடியிருப்புக்கு ரூ. 500, வணிகத்திற்கு ரூ. 1,000 மட்டுமே!

Published

on

தமிழக அரசு மாநிலம் முழுவதுமுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் சொத்து வரி பெயர் மாற்றக் கட்டணத்தைச் சீரமைத்து புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, குடியிருப்பு கட்டிடங்களுக்கான பெயர் மாற்றக் கட்டணம் 500 ரூபாயாகவும், வணிகம் மற்றும் பிற குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 1,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. முக்கியமாக, சொத்து வரி பெயர் மாற்றம் செய்யப்படும்போதே, அதனுடன் தொடர்புடைய குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்புப் பெயர் மாற்றங்களும் தானாகவே மாற்றப்படும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதற்காகப் பொதுமக்கள் தனியாக விண்ணப்பிக்கவோ அல்லது கூடுதல் கட்டணம் செலுத்தவோத் தேவையில்லை.

காலதாமதத்தைத் தவிர்க்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், அனைத்து விண்ணப்பங்களும் UTIS இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே கையாளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் மற்றும் நிலுவைத் தொகைகளைத் தவிர வேறு எந்தவிதமான கூடுதல் தொகைகளையும் உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கக் கூடாது என்றும், உரிய காலக்கெடுவுக்குள் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..