Connect with us

சினிமா

‘சிட்டாடல்’ கதை எனக்குத் தெரியாது’!: பிரியங்கா சோப்ரா

Published

on

பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் உலகளாவிய துப்பறியும் த்ரில்லரான ‘சிட்டாடல்’, எனும் இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு மும்பையில் நடைபெற்றது. இதில் முன்னணி நடிகர்களான ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆசிய பசிபிக் பிராந்தியம் முழுவதும் இந்த தொடரை விளம்பரப்படுத்துவதற்கான சுற்றுப்பயணத்தை படக்குழுவினருடன் நடிகர் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனஸ் ஆகியோர் இணைந்து தொடங்கியிருக்கின்றனர்.

ரூஸோ பிரதர்ஸின் AGBO மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெயில் ஆகியோரால் சிட்டாடல் இணையத் தொடர் உருவாக்கப்பட்டது, ஆறு அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஸ்டான்லி டுசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இந்த தொடரின் முதலிரண்டு அத்தியாயங்கள் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து மே மாதம் 26 ஆம் தேதி வரை வாரந்தோறும் ஒரு அத்தியாயம் என வெளியாகவிருக்கிறது.

பிரைம் வீடியோவின் உலகளாவிய உளவுத் தொடரான சிட்டாடல் எனும் இணையத் தொடரின் ஆசியா பசிபிக் பிரீமியருக்காக மும்பைக்கு படக்குழுவினர் வருகைத் தந்தனர். இதற்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட விவாத நிகழ்வில் இந்த தொடரின் முன்னணி நடிகர்களான ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் கலந்து கொண்டு, தங்களது அனுபவங்களை விவரித்தனர். இந்த தொடர் அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூஸோ பிரதர்ஸின் AGBO ஆல் உருவாக்கப்பட்டது, டேவிட் வெயில் ஷோரன்னராகவும், நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார், சிட்டாடல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்படும், இரண்டு அத்தியாயங்கள் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது, மேலும் மே 26 வரை வாரந்தோறும் ஒரு அத்தியாயம் வெளியாகும்.

நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் பேசுகையில்,“அமேசான் ஸ்டுடியோவின் தலைவரான ஜெனிபர் சல்கே, சிட்டாடல் எனும் தொடரில் கதையின் நாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கியபோது, அவர் ஒரு உலகளாவிய படைப்பாக உருவாக்க விரும்பினார். இது உலகை உண்மையாக இணைக்கும். அமேசான் பன்முகத்தன்மையை உறுதியாக நம்புகிறது, உண்மையான பன்முகத்தன்மை, சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது, வெவ்வேறு தோல் நிறங்களைக் கொண்டிருப்பதன் மூலம் மட்டுமல்ல, மக்கள் பேசும் விதத்தைக் கேட்பதன் மூலமும், உண்மையில் கலாச்சாரத்தை ஆராய்வதன் மூலமும். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாடு மற்றும் கண்டம் முழுவதும் பரவக்கூடிய… நம்பமுடியாத திறனைக் கொண்டுள்ளது. எனவே, எனக்கு கதை கூட முழுமையாக தெரியாது, ஆனாலும் இதில் நான் நடித்திருக்கிறேன்.” என்றார்.

மேசன் கேனாக நடிக்கும் நடிகர் ரிச்சர்ட் மேடன் பேசுகையில், “சிட்டாடல் நம்பமுடியாத அளவிற்கு உடல் மொழியின் தேவையை கொண்டிருக்கிறது. ஆனால் அதுதான் கனவு என்று நினைக்கிறேன். இது சவாலான துப்பாக்கி சுடும் காட்சியோ அல்லது ஆபத்தான சண்டைக் காட்சியோ அல்ல. இந்த இரண்டு கதாபாத்திரங்களும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன,? மேலும் அவை ஒன்றாக நடனமாடுகின்றன… ஒவ்வொரு ஆக்ஷன் காட்சியிலும் அவர்கள் இருவரைப் பற்றி.. கூடுதலாகத் தெரிந்து கொள்கிறோம். அடுத்து என்ன நடக்கிறது என்பதற்கான பதற்றம் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். இந்த நிகழ்ச்சி நாடகம் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் இரண்டிலும் வேலை செய்கிறது.” என்றார்.

ருஸ்ஸோ பிரதர்ஸின் ஏஜிபிஓ மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெயில் ஆகியோரால் சிட்டாடல் தயாரிக்கப்படுகிறது. பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் ரிச்சர்ட் மேடன் ஆகியோருடன், ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் இந்த பரபரப்பான உளவுத் தொடர், பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஏப்ரல் 28 முதலிரண்டு அத்தியாயங்கள் மற்றும் மே 26 வரை வாரந்தோறும் ஒரு புதிய அத்தியாயம் வெளியாகும். இந்த உலகளாவிய தொடர் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஆங்கிலம், இந்தி, ஆகிய மொழிகளில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பிற சர்வதேச மொழிகளிலும் வெளியாகிறது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சிட்டாடல் எனும் உலகளாவிய சுதந்திரமான உளவு நிறுவனம் வீழ்த்தப்பட்டது. உலகில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் நிலை நிறுத்துவதற்காக பணிக்கப்பட்ட இந்த உளவு நிறுவனம், நிழல் உலகிலிருந்து உலகை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சக்தி வாய்ந்த மாண்டி கோர் எனும் குழுவினரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. சிட்டாடலில் பணியாற்றிய உயர் அதிகாரிகளான மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நதியா சின் ( பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) ஆகிய இருவரின் நினைவுகள் அழிக்கப்பட்டதால், அவர்கள் உயிருடன் தப்பினர். அன்றிலிருந்து தலைமறைவு வாழ்க்கையை புதிய அடையாளங்களுடன் வாழத் தொடங்கினர். ஒரு நாள் இரவில் அவரது முன்னாள் நண்பரான பெர்னாட் வொர்லிக் ( ஸ்டான்லி டுசி), மாண்டிக்கோர் ஒரு புதிய உலக ஒழுங்கை நிறுவுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை தடுப்பதற்காக அவரது உதவியை கோருகிறார். மேசன் தனது முன்னாள் கூட்டாளியான நதியாவை தேடுகிறார். இரு உளவாளிகளும் இணைந்து உளவு பணியை மீண்டும் தொடங்குகின்றனர்.

அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் AGBO எனும் நிறுவனத்திற்காக ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ, மைக் லரோக்கா, ஏஞ்சலா ரூசோ, ஓட் ஸ்டாட், ஸ்காட் நெம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். டேவிட் வெயில் ஷோ ரன்னராகவும், நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். ஜோஷ் அப்பீல்பாம், ஆன்ட்ரெ நெமக், ஜெஃப் பிங்க்னர், ஸ்காட் ரோஸன்பர்க் ஆகியோர் இணைந்து மிட்நைட் ரேடியோவின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகின்றனர். இவர்களுடன் நியூட்டன் தாமஸ் சைகல் மற்றும் பேட்ரிக் மோரன் ஆகியோர்களும் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார்கள்.

சிட்டாடல் இணைய தொடர் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட கதைகளுடன் உலகம் முழுவதும் பயணிக்கிறது. ஒவ்வொரு தொடரும் உள்ளூரில் உருவாக்கப்பட்டு, பிராந்தியத்தில் படமாக்கப்பட்டது. மேலும் சிறந்த திறமையாளர்களைக் கொண்டு தனித்துவமான உலகளாவிய படைப்பாக உருவாகி இருக்கிறது. இந்த தொடர் ஏற்கனவே இத்தாலி மற்றும் இந்தியாவில் மாடில்டா டி ஏஞ்சலிஸ், வருண் தவான் மற்றும் சமந்தா ரூத் பிரபு ஆகியோர் நடிக்கும் தொடர்களாக தயாராகி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்22 மணி நேரங்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்22 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

வணிகம்3 நாட்கள் ago

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காலம் நீட்டிப்பு? – உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

இந்தியா7 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா7 நாட்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா7 நாட்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்6 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்4 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

Translate »
Carlisle to edinburgh airport taxi : your ultimate reliable transport solution | call 01228 812612. How does olympia biosciences™ protect client ip better than standard contract manufacturers ?. At great prices.