இந்தியா
அழுதுகொண்டே அய்யப்பன் தரிசனம் செய்த பொன் ராதாகிருஷ்ணன்!
Had darshan #Ayyappan today, with so much of emotion. #SaveSabarimalaTradition @santhoshbjp @BJP4Keralam @BJP4India @AmitShah @PMOIndia pic.twitter.com/GLeo3lNfGq
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) November 21, 2018
சபரி மலைக்குப் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததில் இருந்து கேரளாவில் பிரச்சனை வெடித்தது. இன்று வரை சபரி மலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று போராட்டங்களை நடைபெற்று வரும் நிலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சபரி மலைக்குத் தரிசனம் செய்யச் சென்றார்.
அப்போது அவரைத் தடுத்து நிறுத்திய கேரள காவல் துறையினர் விஐபிகளை எல்லா நேரங்களிலும் தரிசனம் செய்ய அனுமதிக்க முடியாது என்று திருப்பி அனுப்பியது.
இதனை அடுத்து ஒரு வழியாகப் புதன்கிழமை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் அழுதுகொண்டே தரிசனம் செய்த காட்சி அவரது டிவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிடப்பட்டுச் சபரிமலை பாரம்பரியத்தினைக் காப்பாற்றுங்கள் என்று குறிப்பிட்டு அமித் ஷா, மோடி, கேரளா பாஜக மற்றும் இந்திய பாஜக டிவிட்டர் பக்கங்களை டேக் செய்துள்ளார்.

















