வணிகம்
கச்சா எண்ணெய் விலை பாதியாக குறைந்தும், விலை குறையாத பெட்ரோல், டீசல்!
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 45 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. ஆனால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து 11வது நாளாக விலை குறைக்காமல் உள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று பார்த்தால், மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியது.
அதனால், மார்ச் மாதம் இதுவரையில் பெட்ரோல் 2.3 ரூபாயும் டீசல் 2.2 ரூபாயும் குறைந்துள்ளது. மத்திய அரசு கலால் வரியை உயர்த்தாமல் இருந்தால் இந்த விலை குறையும் 3 ரூபாயாக இருந்திருக்கும்.
எஸ்பிஐ வங்கி அண்மையில் கச்சா எண்ணெய் விலை 30 டாலர் பேரல் எனில், பெட்ரோல் டீசல், விலை 10 முதல் 12 ரூபாய் வரை குறையும் என்று கணித்து இருந்தது.
கொரோனா வைரஸ் காரணமாக விடுக்கப்பட்டுள்ள 21 நாட்கள் முடக்கத்தால், பெட்ரோல், டிசல் மீதான தேவை சரிந்துள்ளது. அதுவும் இந்த விலை குறைப்பு ஏற்படாமல் இருக்கக் கரணமாக உள்ளது. எப்போது இந்த நாடு தழுவிய முடக்கம் முடியுமோ, அப்போது வரை பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது.
இன்று சென்னையில் பெட்ரோல் விலை 72.28 ரூபாய் லிட்டர் என்றும், டெல்லியில் 69.29 ரூபாயாகவும் மும்பையில் 73.30 ரூபாயாகவும் பெங்களூரூவில் 71.97 ரூபாயாகவும் விற்கப்பட்டு வருகிறது. டீசல் விலை சென்னையில் 65.71 ரூபாயாகவும், டெல்லியில் 62.29 ரூபாயாகவும் மும்பையில் 65.21 ரூபாயாகவும் பெங்களுருவில் 64.41 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

















