ஆன்மீகம்
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் ஆளுமை குணங்கள் – ஜோதிட ரகசியங்கள்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
ஜோதிடத்தின் படி, பிறந்த மாதம் ஒருவரின் ஆளுமை குணத்தை தீர்மானிக்கிறது. அதன்படி, புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களைப் பற்றி பலரும் தவறாக புரிந்து கொள்வார்கள். “புரட்டாசியில் பிறந்தால் புரட்டி எடுப்பார்கள்” என்ற நம்பிக்கை நிலவினாலும், உண்மையில் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள்.
புரட்டாசி மாதம் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலம். புதன் அறிவு, வித்தை, கணிதம் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாக இருப்பதால், இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். மேலும், புரட்டாசி மாதம் தெய்வீகத்தன்மை நிறைந்ததாக கருதப்படுவதால், இவர்களிடம் அறிவும் செல்வமும் சிறப்பாக குவியும்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் புத்தகங்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். நூல்களை மனப்பாடம் செய்யாமல் அதன் உட்கருத்தை விளக்க வல்லவர்கள். நேர்மையான அணுகுமுறையால் சிலருக்கு பகைவர்களாகத் தோன்றினாலும், இவர்களின் சிந்தனையும் முடிவும் எப்போதும் தெளிவாக இருக்கும்.
செவ்வாய், சனி, சூரியன் பலமாக இருந்தால், புரட்டாசியில் பிறந்தவர்கள் ராணுவம், தீயணைப்பு, காவல்துறை போன்ற துறைகளில் தலைமைப் பதவிகளை அடைவார்கள். படிப்பறிவோடு பட்டறிவும் இவர்களுக்கு இருக்கும்.
மேலும், கலைத்துறையிலும் இவர்களின் கற்பனை திறன் சிறந்து விளங்கும். சிறந்த எழுத்தாளர்களாக, பத்திரிகையாளர்களாகவும், சினிமா மற்றும் நகைச்சுவைத் துறைகளிலும் இவர்களுக்கு வெற்றி உறுதி. நகை, ஜவுளி போன்ற தொழில்களிலும் உயர்ச்சி பெறுவர்.
இவர்கள் விட்டுக்கொடுத்தல், நகைச்சுவை உணர்வு ஆகியவற்றால் நண்பர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குழந்தைகள் வழியாக பாக்கியம் பெரும் வாய்ப்பும் உண்டு. இயற்கையை நேசிக்கும் தன்மை இவர்களின் முக்கிய குணமாகும்.
எனினும், சில குறைகளும் உண்டு. அதிக புத்திசாலித்தனம் இருந்தும், இலக்கை அடைவதில் சோம்பல் காட்டுவார்கள். தங்களது திறமை தாமே உணராமல் இருப்பது இவர்களின் மிகப்பெரிய குறையாகும். சந்தேக மனப்பான்மையும் இவர்களுக்கு இருக்கும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.





