செய்திகள்
நாளை திருமணத்திற்கு செல்லலாமா? – தமிழக அரசு புதிய அறிவிப்பு

உலகமெங்கும் கொரோனா 3வது அலை படு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 750ஆக நீடித்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தொட்டு விட்டது.ஒரு பக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது.
எனவே, தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. 9ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் இல்லை, தியேட்டர்களில் 50 சதவீதம், திருமணத்திற்கு 100 பேர் மட்டுமே அனுமதி, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு நேர ஊரடங்கு என பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில், நாளை ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கின் போது திருமணத்திற்கு செல்ல அனுமதி உண்டா என்கிற குழப்பம் பலருக்கும் எழுந்துள்ளது. ஏனெனில், அரசு முழு நேர ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே பலரும் நாளை திருமண தேதியை நிச்சயித்துள்ளனர்.
இந்நிலையில், இதுபற்றி விளக்கமளித்துள்ள தமிழக அரசு நாளை திருமணத்திற்கு செல்ல அனுமதி அளித்துள்ளது. காவலர்கள் தடுத்தால் திருமண அழைப்பிதழை காண்பித்து பயணங்களை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்த அறிவிப்பு திருமணத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.



















