Connect with us

செய்திகள்

ஓய்வூதிய திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலினிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு – அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம்!

Published

on

சென்னை: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட குழுவினர், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து, தங்களின் இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு ஊழியர்களுக்காக பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) அமலில் உள்ளது. இதை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர்கள் அடங்கிய குழு நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில், கலந்து கொண்ட சங்கங்களில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டவை பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனத் தெளிவாக தெரிவித்தன. இதற்கிடையே, மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (Unified Pension Scheme) அமல்படுத்த முடிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில், பழைய ஓய்வூதிய திட்டம் (OPS), பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS) ஆகிய மூன்றிலும் எது அரசு ஊழியர்களுக்கு ஏற்றது என்பதை ஆராய தமிழக அரசு முடிவு செய்தது.

இதனை ஆய்வு செய்ய, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, நிதித்துறை துணை செயலர் பிரக்திக் தயாள் உள்ளிட்ட உயரதிகாரிகள் அடங்கிய குழு கடந்த பிப்ரவரி மாதத்தில் அமைக்கப்பட்டது. இந்தக் குழு, கடந்த அக்டோபர் மாதம் அரசுக்கு இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.

இதற்கிடையே, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகமெங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், ஜனவரி 6 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தவும் பல சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவினர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து, ஓய்வூதிய திட்டங்கள் குறித்த இறுதி அறிக்கையை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கவுள்ள முடிவுகள் மீது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

வணிகம்1 நாள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்1 நாள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்7 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்3 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
סופר ויליטרה | super vilitra shefapharm. 画ニュース. Jeremy jarvis for mind clarity hub.