சினிமா செய்திகள்
பார்த்திபனின் அடுத்த படத்தில் அபிஷேக்பச்சன்: இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!

பார்த்திபன் ஒரே ஒருவர் மட்டுமே நடித்த திரைப்படம் ’ஒத்த செருப்பு’ என்பதும் இந்த திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.
பார்த்திபன் மட்டுமே நடித்த படம் மட்டுமின்றி அவரே தயாரித்து இயக்கிய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஆஸ்கார் விருது உள்பட பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது என்பதும் ஒரு சில விருதுகளை இந்த படம் பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசின் பனாமா இருது இந்த படத்திற்கு கிடைத்தது என்பதும் கூடுதல் சிறப்பாகும்.
இந்த நிலையில் தமிழில் சூப்பர் ஹிட் ஆகிய ’ஒத்த செருப்பு’ திரைப்படம் ஹிந்தியில் உருவாக இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.
’ஒத்த செருப்பு’ இந்தி ரீமேக்கில் பார்த்திபன் நடித்த வேடத்தில் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளார். இந்த படத்தை தமிழில் இயக்கிய பார்த்திபன் இந்தியிலும் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழைப் போலவே ஹிந்தியிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.














