தமிழ்நாடு
சரத்குமார் ,ராதிகா மீது காசோலை மோசடி வழக்கு: சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவு

சரத்குமார் மற்றும் ராதிகா பங்குதாரராக இருந்த நிறுவனத்தின் காசோலை ஒன்று போதிய பணம் இல்லாமல் திரும்பி வந்ததை அடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கில், சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் ஓர் ஆண்டு சிறை தண்டனையை சிறப்பு நீதிமன்றம் விதித்து சற்றுமுன் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு தற்போது தான் தேர்தலையும் சந்தித்துள்ள சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு திடீரென சிறை தண்டனை என்ற தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் தங்களுடைய சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என சரத்குமார் மற்றும் ராதிகா தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனுவின் மீது சற்றுமுன் விசாரணை நடந்தது.
இந்த விசாரணையில் ராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



















