தமிழ்நாடு
ஞாயிறு முழு ஊரடங்கு, ஆனாலும் சில தளர்வுகள்: தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக தமிழகத்தில் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு மற்றும் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்தது. அந்த வகையில் வரும் ஜனவரி 23ஆம் தேதி ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை வெளியூர்களிலிருந்து பேருந்து மற்றும் ரயிலில் ஏறியவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து சேர்கின்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தங்களுடைய இருப்பிடத்திற்கு செல்வதற்கு பேருந்து ஆட்டோ டாக்ஸி என்ற என்ற வாகனமும் இல்லாததால் கடும் அவதி இருந்தனர் என்பது கடந்த ஞாயிறு ஊரடங்கு அன்று தெரியவந்தது.
இதனை அடுத்து வரும் ஞாயிறு அன்று சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் கால் டாக்சிகள் அனுமதி உண்டு என்ற தளர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேபோல் தமிழகத்தின் மற்ற மாவட்ட ரயில் நிலையம், வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயல்பாடுகளின் தடைகள் தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




















