உலகம்
ஓமிக்ரான் கொரோனா தொற்று வேகமாகத் தடுப்பூசி போட்டவர்களையும் பாதிக்கிறது.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

டெல்டா வகை கொரோனா தொற்றை விட ஓமிக்ரான் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுவரையில் டெல்டா வகை கொரோனா தொற்றை விட ஓமிக்ரான கொரோனா தொற்று பரவுவதற்கான ஆதாரம் இல்லாமல் இருந்தது.

ஆனால் இப்போது டெல்டா வகை கொரோனா தொற்றை விட ஓமிக்ரான கொரோனா தொற்று பரவுவதற்கான தரவுகள் கிடைத்துள்ளன.
மேலும் இந்த ஓமிக்ரான் கொரோனா தொற்று ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்றை ஏற்படுத்தும்.

கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டு இருந்தாலும் அவர்களையும் பாதிக்கும் என டெட்ரோஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி மாதத்தில் 3வது அலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளன.














