வணிகம்
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா? – செப்டம்பரில் அறிவிப்பு வெளியாகும் சாத்தியம்!
Published
10 மாதங்கள் agoon
By
Poovizhi
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
2004ஆம் ஆண்டில் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதிய திட்டம் (NPS) நடைமுறைக்கு வந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக புதிய ஓய்வூதிய திட்டம் பெரிதாக பலனளிக்கவில்லை என்று அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டி, OPS-ஐ மீண்டும் கொண்டுவரக் கோரி வருகின்றனர்.
2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழக அரசு OPS தொடர்பாக ஆய்வு செய்ய சிறப்பு குழுவை அமைத்தது. தற்போது அந்தக் குழு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறது. செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்தக் குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும், OPS குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் மயில், “அரசு OPS-ஐ மட்டுமே அமல்படுத்த வேண்டும். மாற்று திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதற்காக எங்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என தெரிவித்துள்ளார்.
OPS குறித்த ஆய்வு குழுவின் பரிந்துரைகளை அரசு பெற்றவுடன், OPS-ஐ நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.














