தமிழ்நாடு
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற அண்ணாவின் கொள்கையை மீறிய மு.க.ஸ்டாலின்.. என்ன சொல்றார் பாருங்

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற அண்ணாவின் கொள்கையை மீறுகிறாரா மு.க.ஸ்டாலின் என கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு பெற்ற 43,981 வாக்குகளை விட 66,575 வாக்குகள் அதிகம் பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிக்கையாளரைச் சந்தித்த திமுக கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், ”ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று இருப்பது திராவிட மாடல் அரசியலுக்குக் கிடைத்த வெற்றி.மக்கள் திராவிட மாடலுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் பாடம் புகட்டியுள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.

I am already in National Politics: MK Stalin In Farooq Abdullah’s Call to PM candidate
புதன்கிழமை, ஜம்மு காஷ்மீர் தேசிய கழகம் கட்சித் தலைவர், திமுக தலைவரைத் தேசிய அரசியலுக்கு வரும் படியும், பிரதமர் பதவிக்குப் போட்டியிடவும் அழைப்பு விடுத்து இருந்தார்.
அதுகுறித்து மு.க.ஸ்டாலினிடம் பத்திரிக்கையாளர் கேட்டபொழுது, ‘நான் ஏற்கனவே தேசிய அரசியலில் தான் உள்ளேன்’ என தெரிவித்தார்.
இதனை வைத்து பார்க்கும் போது மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற அண்ணாவின் கொள்கையை மீறிச் செயல்படுகிறாரா மு.க.ஸ்டாலின் என கேள்வி எழுந்துள்ளது.