Connect with us

தமிழ்நாடு

முதல்முறையாக அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்ட ஓபிஎஸ்!

Published

on

முதல்முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களுக்கு இடையே பயன்படும் மொழியாக தற்போது ஆங்கிலம் இருப்பதாகவும் அதனை ஹிந்தி ஆக மாற்ற வேண்டும் என்று கூறினார். இதற்கு திமுக உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

மத்திய அமைச்சரவைக்கான எழுபது விழுக்காடு நிகழ்ச்சி நிரல்‌ இந்தி மொழியில்‌ தான்‌ தயாரிக்கப்படுகிறது என்றும்‌, மற்ற மொழிகளை பேசும்‌ மாநில மக்கள்‌ இந்திய மொழியில்‌ பேச வேண்டுமென்றும்‌, ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக்‌ கொள்ள வேண்டுமென்றும்‌ நாடாளுமன்ற ஆட்சிமொழிக்‌ குழுவின்‌ தலைவர்‌ என்ற முறையில்‌ மாண்புமிகு உள்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ பேசியிருப்பதாக பத்திரிகைகளில்‌ செய்திகள்‌ வந்துள்ளன.

இந்தி மொழி தேவை என்கிற பட்சத்தில்‌, இந்தி மொழியை தாங்களாகவே மனமுவந்து கற்றுக்‌ கொள்ள வேண்டும்‌ என்று நினைப்பவர்கள்‌ தாராளமாக கற்றுக் கொள்ளலாம்‌ என்றும்‌, அதே சமயத்தில்‌ இந்தி திணிப்பு என்பதை ஏற்றுக்‌ கொள்ள முடியாது என்றும்‌ பேரறிஞர்‌ அண்ணா அவர்கள்‌ கூறி இருக்கிறார்கள்‌. நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில்‌ இருமொழிக்‌ கொள்கைதான்‌ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை இந்தியாவில்‌ ஆங்கில மொழி இருக்கிறது என்றால்‌ அதற்கு மூலக்‌
காரணம்‌ பேரறிஞர்‌ அண்ணா அவர்கள்‌.

பேரறிஞர்‌ அண்ணா அவர்களின்‌ இருமொழிக்‌ கொள்கையில்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ உறுதியாக இருக்கிறது என்பதையும்‌, தேசிய கல்விக்‌ கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டுவிட்டது என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?