Connect with us

தமிழ்நாடு

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது: நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்!

Published

on

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அகதிகளாக வந்த இலங்கை தமிழர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக தமிழகத்தில் நாங்கள் குடியிருக்கின்றோம் என்றும், எங்களது பூர்வீகம் தமிழ்நாடு தான், எங்களது முன்னோர்கள் வணிகரீதியாக இலங்கைக்கு சென்றார்கள் என்றும், தற்போது அங்கு உள்ள அரசியல் சூழலின் காரணமாக மீண்டும் அகதிகளாக நாங்கள் தமிழகம் திரும்பி விட்டோம் என்றும், எனவே எங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இலங்கை அகதிகள் மனு தாக்கல் செய்திருந்தனர்

இந்த மனுவை கடந்த 2019ஆம் ஆண்டு நீதிபதி சுவாமிநாதன் விசாரணை செய்து இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றது? அவர்களது மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தலைமை நீதிபதி அமர்வு முன் மத்திய அரசு மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ’இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு குடியேறியவர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளார்கள் என்றும், எனவே அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது இயலாத காரியம் என்றும், எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று வாதிட்டார்

ஆனால் தலைமை நீதிபதி இதுகுறித்து கூறியபோது, ‘தனி நீதிபதி உத்தரவு என்பது உங்களுக்கு குடியுரிமை கொடுக்க சொல்லி உத்தரவு பிறப்பிக்க கிடையாது என்றும் அவர்களுடைய மனுவை பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், அதாவது மனுவை ஏற்றுக்கொண்டு குடியுரிமை வழங்கலாம் அல்லது நிராகரிக்கலாம் என்றுதான் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் என்றும், எனவே மத்திய அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் ஏன் தற்போது மேல்முறையீடு செய்தீர்கள் என்று மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞருக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்

பின்னர் இதுகுறித்து தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு இலங்கை அகதிகளாக உள்ள பல்வேறு மனுதாரர்களுக்கு உரிய பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தற்போது அடுத்த மாதத்திற்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?