தமிழ்நாடு
“மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை”- அரசுப் பேருந்துகளில் ஓட்டப்பட்ட ஸ்டிக்கர்!

தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின், முதல் நாளிலேயே 5 கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளார்.
-அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக மே மாதமே ரூ.2000 வழங்கப்படும்.
-16.5.2021 முதல் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறது.
-சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் மகளிர் அனைவரும் கட்டணமின்றி பயணிக்கலாம்.
— ANTONY PARIMALAM ???? (@IlovemyNOAH2019) May 7, 2021
-மக்களிடம் பெற்ற மனுக்கள் மீதான குறைகளை நிவர்த்தி செய்ய ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறை உருவாக்கப்படுகிறது.
-கொரோனா பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைப் பெறலாம்.
ஆகியவற்றை செயல்படுத்தி இன்று கையெழுத்திட்டு உள்ளார் ஸ்டாலின். அதில் மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம் அறிவிப்பு வெளியானதை அடுத்து, தமிழகத்தின் பல பகுதிகளில் ‘மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை’ என்கிற ஸ்டிக்கர்கள் ஓட்டப்பட்டு வருகின்றன.
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல்வரின் உத்தரவு முதல் நாளே செயல்பாட்டு வந்துள்ளது.












