கிரிக்கெட்
நாம் தான் கோப்பையை வெல்வோம், நம்பிக்கையுடன் விளையாடுங்கள்: நீடா அம்பானி

நாம் தான் கோப்பையை வெல்வோம் நம்பிக்கையுடன் விளையாடுங்கள் என மும்பை அணி வீரர்களுக்கு நீடாஅம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
மும்பை அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அந்த அணியின் வீரர்கள் மிகவும் சோர்வாக இருக்கும் நிலையில் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நீடா அம்பானி ஆடியோ மெசேஜ் அனுப்பியுள்ளார்
அந்த ஆடியோ மெஸேஜி மும்பை அணியின் வீரர்களுக்கு தற்போதைய தேவை நம்பிக்கை தான் என்றும் ஒவ்வொருவரும் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் பிற வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
நாம் இதுபோன்று பல முறை சோதனைகளை சந்தித்து அதன்பின் நம்பிக்கையுடன் வெற்றி பெற்று கோப்பையை வென்று உள்ளோம் என்றும் அதே போல் இந்த முறையும் கண்டிப்பாக கோப்பையை வேண்டும் என்றும் அனைத்து வீரர்களும் நம்பிக்கையுடன் விளையாடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்
வெற்றியோ தோல்வியோ மும்பை அணி நிர்வாகம் வீரர்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்















