Connect with us

சினிமா செய்திகள்

பிறந்த நாள் கொண்டாடும் ரஜினி – அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Published

on

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 40 வருடங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். பத்மவிபூஷன், தாதா சாகேப் பால்கே போன்ற உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.

இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே, ரசிகர்களும், திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருபக்கம், அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரஜினி ஜி. உங்கள் கிரியேட்டிவிட்டி மற்றும் நடிப்பு திறமையால் மக்களை கவர்ந்து கொண்டே இருங்கள். கடவுள் உங்களுக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்வை கொடுக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!’ என தெரிவித்துள்ளார்.

72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இன்று தனது 72வது அகவையில் அடியெடுத்து வைக்கும் இனிய நண்பரும், ‘தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறப்பவரம், ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், பத்மவிபூஷன், தாதா சாகெப் பால்கே விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவரும், சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவருமான ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இறையருளால் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்த்து உயர்த்திட எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?