இந்தியா
ததிழ்நாடு போலீஸ் செய்த தரமான காரியத்தை பாருங்க..

சில நாட்களுக்கு முன்பாக வேலுார் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் இரயிலில். இருந்து ஒரு கர்ப்பிணிப் பெண் பாலியல்தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு இரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தெற்கு ரயில்வே நிருவாகம் ரூ.50,000 நிவாரணம் வழங்கியது. அந்த பெண் உடனடியாக வேலுார் அரசு மருத்துவக் கல்லுரரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் வயிற்றிலிருந்த சிசு மரணித்து விட்டதால் அறுவை சிகிச்சை செய்து இறந்த சிசு அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தமிழ்நாடு அரசு ரூ.5,00,000 நிவாரணம் வழங்கியது. மேலும் தொடர் சிகிச்சைக்காக வேலுாரிலுள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது போன்ற குற்றச் செயல்களை தடுக்கும் விதமாகவும் அத்தகைய நேரங்களில் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வசதியாகவும் தமிழ்நாடு காவல்துறை கட்டணமில்லா தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்ந எண் 1512. இந்த எண்ணுக்கு தங்கள் புகார்களை தெரிவித்தால் உடனடி நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும் பயணிகள் வசதிக்காக ஒரு வாட்சப் எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த எண். 9962 500 500. இதன் மூலமும் பாதிக்கப்படும் பெண்களோ அல்லது அருகில் உள்ள பொதுமக்களோ தங்களுடைய புகாரை அளிக்கலாம். இது தவிர ஏற்கனவே WOMEN HELP LINE NUMBER 181 மற்றும் இரயில்வே காவல்துறைக்கு புகார் அளிக்க 139 என்ற எண்ணும் வாட்சப் எண் 98811 93322 என்ற எண்ணும் நடைமுறையில் உள்ளன. இவற்றின் மூலமும் புகார் அளிக்கலாம்.
சமீப கால பாலியல் தொல்லை சம்பவங்கள் சிறு குழந்தைகள் முதல் வயதான மூதாட்டி வரை மட்டுமல்லாது இப்போது கர்ப்பிணி பெண்கள் வரை நீண்டு கொண்டே வருகிறது. போக்சோ என்கிற சட்டமும் தனது கடமையை செய்து வருகிறது.
ஆயிரம் இருந்தலும் சகமனித உயிர்களிடம் எப்படி மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுவது என்று ஒவ்வொரு மனிதரும் பாடம் கற்காதவரை இது போன்ற சம்பவங்கள் குறைய வாய்ப்பேயில்லை. காலம்தான் இவற்றிற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.















