இந்தியா
நர்ஸ் கையில் இருந்து நழுவி கீழே விழுந்த குழந்தை: பிறந்த சில நிமிடங்களில் பலியான பரிதாபம்!

குழந்தை பிறந்த சில நொடிகளில் நர்ஸ் கையிலிருந்து நழுவி விழுந்து குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ என்ற பகுதியில் ஜீவன் ராஜ்புத் என்பவரின் மனைவி நிறைமாத கர்ப்பமாக இருந்த நிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு குழந்தை பிறந்தது என்பதும் குழந்தை உயிருடன் இருந்ததையும் அவரது மனைவி பார்த்துள்ளார்.
இந்த நிலையில் குழந்தையை கையில் எடுத்த நர்ஸ் திடீரென அவரது கையிலிருந்து குழந்தை நழுவி விழந்ததாகவும், அதனை பார்த்த தாயார் அதிர்ச்சியில் கதறியதாகவும் கூறப்படுகிறது .
இந்த நிலையில் நழுவி விழுந்த குழந்தையின் தலையில் படுகாயமடைந்ததால் அந்த குழந்தை இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து குழந்தையின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
பிரசவம் பார்த்த நர்ஸ், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.