ஆரோக்கியம்
ஆங்கில மருத்துவமா … அட போப்பா..
அலோபதி சிகிச்சை முறை எனப்படும் ஆங்கில மருத்துவத்தில் அதிக நாட்டமுடைய வர்கள் இதர மாற்று சிகிச்சை முறைகளில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டார்கள். அவர்களுக்கு ஆங்கில சிகிச்சை முறையில் நோய் உடனடியாக குணமாவதாக நம்பிக்கை இருப்பதே அதற்கு காரணமாகும். ஆனால் அந்த ஆங்கில சிகிச்சை முறைகளால் நோய்கள் வளர்ச்சி அடைகின்றனவே தவிர குறைவது இல்லை என்பது அவர்களுக்கு புரிவது இல்லை.. அல்லது அதனை புரிந்து கொள்ள அவர்கள் தயாராக இல்லை.
ஒரு சாதாரண தலைவலியையே எடுத்துக் கொள்வோம்.
டாக்டரிடம் போனால் அவர் மாத்திரையைத் தருகிறார். அந்த மாத்திரையைச் சாப்பிட்டவுடனே நமது தலைவலி மறைந்து விடுகிறது. அது மறைந்து விடுகிறதே தவிர குணமாவது இல்லை என்பது நம்மில் பலருக்கு தெரியாது.
மாத்திரையைச் சாப்பிட்டதும் தலைவலி குணமாகி விட்டதாக நினைக்கிறோம்.
மாத்திரை சாப்பிடுவதற்கு முன் இருந்த தலைவலி, மாத்திரை சாப்பிட்டவுடன் எங்கே போயிற்று? அது வேறு எங்கும் போகவில்லை. அது நமது உடலுக்குள்ளேயேதான் இருக்கிறது. ஆனால் அந்த தலைவலியைப் பற்றிய உணர்வு நமக்கு இருப்பதில்லை. நாம் சாப்பிட்ட மாத்திரை அந்த உணர்வை நாம் இழக்குமாறு செய்து விட்டது.
இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாமா…
நமக்குத் தேள் கொட்டி விட்டால் உடனே அலறியடித்துக் கொண்டு டாக்டரிடம் செல்கிறோம். டாக்டர் உடனே ஒரு ஊசி போடுகிறார். கொஞ்ச நேரத்திலேயே அந்த வலி வேதனை படிப்படியாக குறைந்து காணாமல் போகிறது. சரியாகி விட்டது என்று நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் அந்த தேளின் கொடுக்கின் வழியே நமது உடலில் செலுத்தப்பட்ட விஷம் என்ன ஆனது? எங்கே போனது? டாக்டர் போட்ட ஊசி மருந்து அந்த தேளின் விஷத்தினுடைய தன்மையை மாற்றி விட்டதா? அல்லது அந்த விஷம் அந்த ஊசி மருந்தால் நமது உடலிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதா?
அப்படி ஏதும் நடக்கவில்லை. கொட்டிய தேளின் விஷம் நமது உடலை விட்டு எங்கும் போகவில்லை. உடம்பினுள்தான் இருக்கிறது. ஆனால் அந்த விஷத்தினால் ஏற்பட்ட வேதனையின் உணர்வு நமக்கு இருப்பதில்லை. அந்த உணர்வை நாம் இழந்து விடுமாறு செய்து விடுகிறது டாக்டரின் ஊசி மருந்து.
அப்படித்தான் நமது உடல் உணர்கின்ற நோயின் அறிகுறிகளை நமது உடல் மறைக்கிற அல்லது மறக்கடிக்கிற வேலையைத்தான் இந்த ஆங்கில மருத்துவம் செய்து வருகிறது.
அலோபதி மருத்துவம் என்றால் என்ன தெரியுமா?
Allopathy is a Treatment of diseases by inducing a different tendency. இது நாம் சொல்வது இல்லை. அலோபதி என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரி கொடுத்திருக்கும் விளக்கமே அதுதான்.
நோயின் குறி குணங்களை மறைப்தை விட்டு திருவள்ளுவர் சொன்னது போல் நோய் நாடி நோய் முதல் நாடி சிகிச்சை அளிக்கும் வைத்திய முறை எது என்று அறிந்து இனிமேல் சிகிச்சை மேற்கொள்வோமா?











