சினிமா செய்திகள்
நஸ்ரியாவின் வைரல் ‘எஞ்சாயி எஞ்சாமி’ #EnjoyEnjaami

நடிகை நஸ்ரியா நசீமின் ‘எஞ்சாயி எஞ்சாமி’ வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.
‘கேஸ்ட்லஸ் கலெக்டிவ்’ இசைக் குழு மூலம் தமிழகத்தில் பிரபலமானவர் அறிவு. அதேபோல ‘ஏய் சண்டக்கார’, ‘காட்டுப் பயலே’, ‘ரவுடி பேபி’ உள்ளிட்ட பாடல்களைப் பாடி தமிழின் முன்னணிப் பாடகியாக உருவெடுத்துள்ளார் தீ. இவர்கள் இருவரும் இணைந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் ‘எஞ்சாயி எஞ்சாமி’ என்னும் பாடலை வெளியிட்டனர்.
தமிழின் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்பாடலை தயாரித்தார். வித்தியாசமான மற்றும் புதுமையான இசையாலும், அசர வைக்கும் காட்சிகளாலும் இந்தப் பாடல் நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகிறது. இதுவரை இந்தப் பாட்டை யூ-டியூபில் மட்டும் நான்கரை கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் இந்தப் பாடல் பல யூ-டியூப் சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
இந்நிலையில் நடிகை நஸ்ரியா, இந்தப் பாடலுக்கு லிப் மூவ்மென்ட் கொடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. எஞ்சாயி எஞ்சாமி பாட்டின் ரீச்சை இது பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.